பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஒளிவளர் விளக்கு

அழுக்குப் படிந்த ஒட்டைக் குடிசைகளில் வாழ்கிருர் களே!" என்ற அங்கலாய்ப்பு உண்டாயிற்று. அரசனும் அரசியும் சேர்ந்து அடிக்கடி வருந்தினர்கள். 'பெற்ற மனம் பித்து; பிள்ளை ம்னம் கல்லு" என்ற பழமொழிக்கு அவர்களேக் காட்டிலும் சிறந்த உதாரணம் கிடைக்காது. யார் யாரையோ அனுப்பிப் பிள்ளைகளுக்கு உண்மை யைச் சொல்லச் சொன்னன் அரசன். அவர்கள் சொன் னதைப் பிள்ளைகள் காதில் வாங்கிக் கொள்ளவே யில்லை. ஒருகால் கேட்டுச் சற்றே யோசனை பிறந்தாலும் அடுத்த கணத்தில் அதை மறந்து போனர்கள்.

அரசர் பெருமானுக்கு இரக்கம் மிகுதியாயிற்று. "நம்மை நோக்கி அவர்கள் வரவில்லையென்று சும்மா இருக்க லாமா? என்ன இருந்தாலும் பிள்ளைக்கும் பெற்ருேருக்கும் உள்ள உறவு விட்டுப் போகுமா? நாமே அவர்கள் இருக்குமிடம் சென்று அவர்களே வழிப்படுத்த வேண்டும்' என்ற கருணை அம் மன்னனுக்கு எழுந்தது. அன்ன நடை மடவாளாகிய தன் மனைவியுடன் அவன் தன் குழந்தை களை நோக்கிப் புறப்பட்டு விட்டான்.

பிள்ளைகள் இருக்கும் பகுதிக்கு வந்தான். தனக் கென்று ஓர் இல்லம் கட்டிக்கொண்டு அதனுள்ளே புகுந்தான். தன் பிள்ளைகள் காண அங்கே இருந்தான்; ஆனந்தத்தால் கூத்தாடின்ை.

அப்போது எல்லாப் பிள்ளைகளும் அவனிடம் போக வில்லை. சிலர் உள்ளத்திலே ஒருவித மயக்கம் இருந்து அவனிடம் செல்லாமல் தடுத்தது. சிலர் அவனிடம் சென்று அவன் கோலத்தைக் கண்டார்கள்; அவனே தம்முடைய தந்தை என்று உணர்ந்தார்கள். 'குழந்தாய்! உனக்கென்று பெரு வீடு கட்டிக் காத்திருக்கும் என்னை விட்டு இங்கே வந்து துன்பம் அடையலாமா? இந்த ஒட் டைக் குடிசையிலே வாழ்கிருயே! இதில் என்ன சுகம் கண்