பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஒளிவளர் விளக்கு

மாழ்கியிருப்போம். அவர் இவ்விடத்துக்கு வந்து வாழா விட்டால் காம் அவரைக் காண்பது ஏது? அவர் வந்து வாழத் தேர்ந்தெடுத்தாரே இந்த ஊரை; இது வாழட்டும்; எங்கள் தந்தையை காங்கள் காணச் செய்த இந்த ஊர் மன்னுக! இது சிலை பெற்று நிற்க விற்க, என் போன்ற வர்கள் வந்து உண்மை உணர்ந்து பழைய வறிய வாழ்வை மாற்றிக் கொள்வார்கள்; நல்ல பிள்ளைகளாகி விடுவார்கள். நல்ல பிள்ளைகள் மேன்மேலும் அதிகமாகட்டும்' என்று வாழ்த்தினன். அதோடு கிற்கவில்லை. அவன் தன் தங்தையிடம் வைத்த அன்பு கரை கடந்து கின்றது. 'அறியாதவர்கள் இவரைப் பார்த்தால் சிரிக்கவும் கூடும். ‘என்ன அற்புதமான அரண்மனை! அதன் அளவை யாராவது அறிந்துசொல்ல முடியுமா? அதை விட்டு விட்டு இந்த ஊருக்கு வந்து வாழ்கிருரே! போதாக்குறைக்கு அங்கே அந்தப்புரத்தில் வாழும் அரசியையும் அல்லவா இழுத்துக் கொண்டு வந்திருக்கிருர்? அன்னம் கடப்பது போல மெல்ல கடக்கும் மெல்லியலாகிய இவள்தான் எப்படி இவ்வளவு தூரம் வந்தாள்? என்ன பைத்தியங்கள்! இவன் ஒரு பித்தன்; இவனைத் தொடர்ந்து வந்த இவளும் ஒரு பித்தி என்று அவர்கள் சொல்வார்கள். ஐயோ பாவம்! அவர்கள் உண்மையை உணராதவர்கள். இந்தப் பித்துப் பிடித்ததனால்தான் காங்களெல்லாம் உய்ந்தோம். இன்னும் பலர் உய்யக் கிடக்கிருர்கள். இந்தப் பித்து என் தந்தையா ரிடம் மாருமல் இருக்க வேண்டும். அப்போதுதான் உலகெலாம் விளங்கும். மறுபடியும் குடிசை வாழ்க் கைக்கு வராதபடி எங்களுக்கு அருள் செய்யும் பித்தனுக இவர் பல்லாண்டு பல்லாண்டு வாழட்டும்" என்று பல்லாண்டு கூறினன். தன்னைப்போல் உண்மையுணர்ந்து வள வாழ்வு பெற்ற மற்றப் பிள்ளைகளையும் கூவி அழைத்து. "வாருங்கள் எல்லோரும். இந்த ஊர் மன்னுக என்று பாடுவோம், நம்முடைய சகோதரர்கள் மேன்