பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்ப்ஸ்லர்ண்டு 35

மேலும் வளர்க என்று வாழ்த்துவோம். கம்முடைய தங்தையாரின் பெருமையையும் கருணையையும் உணராமல் தவறு சொல்லி இழித்துப் பேசும் பொல்லாத மனிதர்கள் நம்மை விட்டு நெடுந்துாரம் போகட்டும். இந்த ஊரில் உள்ள இல்லத்திலே நமக்காகத் தன் பெருமையைச் சுருக் கிக்கொண்டு நம் தாயினுடன் வந்து புகுந்து நமக்குக் கருணை செய்து, நாம் இனிமேல் இந்த அவலமாகிய குடிசை வாழ்வு வாழாதபடி வழி வகுத்த பித்தராகிய கம் தங்தையார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவென்று பாடுவோம் ; வாருங்கள்' என்று முழங்கினன்.

- மேலே சொன்னது உவமைக் கதை. அக்கதையின் கருத்தைச் சுருக்கமாகச் சொன்னல் போதும். அந்தப் பேரரசன்தான் சிவபெருமான்; நடராசன். அவன் குழங் தைகள் உயிர்க் கூட்டங்கள். அவர்கள் வாழும் ஊர் உலகம். குடிசை உடம்பு. அரசன் வந்து புகுந்த ஊர் தில்லை. அவன் வாழும் இல்லம் பொன்னம்பலம். எல் லோரையும் கூவி அழைத்துப் பல்லாண்டு பாடுகிறவர் சேந்தனர்.

'பல்லாண்டு என்னும் பதம் கடந்தாளுகிய இறை வனுக்குப் பல்லாண்டு பாடுவது அறியாமை அன்ருே. என்ருல், அது பக்தியினல் உண்டாகும் கிலே. அவனுக்கு எதலுைம் ஊறுபாடு கிகழாது, அவன் கித்தியன் என்ற உண்மைகளை அறிந்தும் அந்த அறிவை மறைத்து, இந்தப் பித்து நிலைக்கு ஒர் ஊறும் வராமல் நீடுழி வாழட்டும் என்னும்படி செய்கிறது பக்தி.

பெரியாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய பல்லாண் டுக்குப் பேருரை எழுதிய பெரிய வாச்சான்பிள்ளை, எல்லாம் வல்ல இறைவன் தம்மை வாழ்த்தி வாழ்விக்கும் நிலையில் இருக்க, அவனே வாழ்த்துவது எவ்வாறு முறை