பக்கம்:ஓங்குக உலகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாட்டுக்குழைத்த நல்லவர்

97


பச்சையப்பர் அறநிலையக் குமுவின் முக்கிய தலைவர் செட்டிநாட்டு அரசரிடம் ஏதோ சொன்னார். அவர் ஆணையின்படி எனக்கு உரிய மணிகள் (14) பகல் இரண்டு மணி வரையிலும் கல்லூரியில் அமைய, பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரையில் அவருடன் இருந்து நிருவாகத்தைக் கவனித்து வந்தேன். பாரததேவி காலைப் பத்திரிகை. பின் அவர்கள் சுதேசமித்திரனில் ஆசிரியராக இருந்தபோதுகூட என்னை வரச்சொல்லிப் பேசுவார்கள்.

அவர்தம் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் நடைபெறும். சில ஆண்டுகளில் நான் செயலாளனாக இருப்பேன். திரு இராஜாஜி, திரு காமராசர் போன்ற பெருந்தலைவர்கள் வந்து தலைமை வகித்து வாழ்த்துவர். 1967ல் நான் செயலாளனாக இருந்தேன். செயற்குழு திருவல்லிக்கேணியில் கூடியது. யார் தலைமை வகிப்பது என்று பேசினர். நான் அன்றைய முதல்வர் ‘அண்ணா அவர்களை அழைக்கலாம்,’ என்றேன். எனினும் பலர் அவர்கள் வரமாட்டார்கள் என்றனர். நான் அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள் என்றேன். கூட்டம் இரவு 8.30க்கு முடிந்தது. நேரே நுங்கம்பாக்கம் ‘அவின்யூ சாலை’ அண்ணா இல்லத்துக்கு வந்தேன். அவர்கள் மேலே இருந்தார்கள். கீழே செயலர் (திரு. சொக்கலிங்கம் என எண்ணுகிறேன்-சரியாக நினைவில்லை) இருந்தார். என்னை மேலே போகச் சொன்னார். நான் அந்நேரத்தில் வந்ததைக் கேட்க, நான் ‘முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழாவிற்கு இந்நாள் முதல்வர் தலைமையேற்க வேண்டும்’ என்று சொன்னேன். உடனே அண்ணா அவர்கள் ‘இதைவிட எனக்கு வேறு என்ன வேலை?’ என்று கூறி, செயலாளரை நாட்குறிப்பைக் கொண்டுவரச் சொன்னார்கள், அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/100&oldid=1127602" இலிருந்து மீள்விக்கப்பட்டது