பக்கம்:ஓங்குக உலகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

ஓங்குக உலகம்


அன்று வேறு நிகழ்ச்சி குறிக்கப்பெற்றிருந்தது. அதை மாற்றிக்கொள்ளச் செய்து, தலைமை ஏற்க இசைந்தார்கள். வந்தார்கள். இருவரும் கலந்து மகிழ்ந்த காட்சியினைக் கண்டு மகிழ்ந்தேன். திருவல்லிக்கேணி நேஷனல் மகளிர் பள்ளியில் விழா நடைபெற்றது. விழாவில் வரவேற்றுப் பேசிய நான், இருவரையும் பாராட்டி, போற்றி ‘இன்றே போல்க நும்புணர்ச்சி’ என்ற சங்கப் புலவன் வாழ்த்தால் வாழ்த்தி மகிழ்ந்தேன். இருவர்தம் உள்ளமும் இயைந்த பெருநிலை கண்டு பெருமகிழ் வெய்தினேன்.

ஒருமுறை சட்டமன்ற மேலவையில் நியமன உறுப்பினர் ஒருவரைத் தேர்வு செய்யவேண்டி வந்தது. திரு பக்தவத்சலம் என்னை அழைத்து, மேலவைக்கு ஒருவரை நியமிக்கவேண்டும். அதற்கு உங்கள் பெயரை சிபாரிசு செய்யப்போகிறேன். ‘தமிழாசிரியர் ஒருவரைத் தான் நான் சிபாரிசு செய்வேன்’ என்றார். நான் தாழ்மையாக ‘ஐயா! நான் அரசியலிலிருந்து விலகி நெடுந்தூரம் வந்துவிட்டேன். மன்னியுங்கள். என்னை விட்டு விடுங்கள்’ என்றேன். அவர் இசைந்தார். எனினும் அந்த இடத்துக்கு மற்றொரு தமிழாசிரியரையே நியமித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறே பலவகையில் பணிபுரிந்த நல்லவர். நான் என் சொந்தப் பொறுப்பில் வள்ளியம்மாள் கல்வி அறம் தொடங்கிய போதும் இடம் பெற உதவி செய்தார். (இதனை விரிவாக என் ‘திரும்பிப் பார்க்கிறேன்-திகைத்து நிற்கிறேன்’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன். (பக். 151-152). தவிர, பள்ளி தொடங்கும் போதும் கட்டடத் திறப்பின்போதும் வந்து கலந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/101&oldid=1127604" இலிருந்து மீள்விக்கப்பட்டது