பக்கம்:ஓங்குக உலகம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

ஓங்குக உலகம்



எங்கள் வள்ளியம்மை பள்ளிக்கு இவர் உதவிய உதவியை என்றென்றும் மறக்க முடியாது. பள்ளிக்கு வரவில்லை யாயினும் தம் கையாலேயே இரண்டு முழுப் பக்கங்கள் எழுதி வாழ்த்தனுப்பிய அவர் தம் அன்பினை எப்படி அறுதியிட முடியும்! அதைக் காண்பார் யாரும் ‘அவராதம் கையாலேயா இவ்வளவு நீண்ட வாழ்த்தினை எழுதினார்’ எனக் கண்டு கண்டு இன்றும் வியக்கின்றனர். அன்பு திரு. பரமசிவானந்தம் எனத் தொடங்கி என் அன்னையின் பெயரால் அமைந்த தொண்டினைப் பாராட்டித் ‘தங்களைப் போன்றோர் தான், தமிழகத்தையும் தமிழர்களையும் தமிழையும் வாழ வைக்கும் பணியினைச் செய்கிறீர்கள்’ என்று கோடிட்டு வாழ்த்தியுள்ள பெருமைக்கு என்னை உரியவனாக்கினார்கள் (24-2-82)

எங்கள் பள்ளிக்கென ஒதுக்கிய நிலத்தினை வேறு சிலர் பறித்து உரிமையாக்கிக் கொள்ள நினைத்தனர். அவர்கள் பெரும் செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்கள். உயர் பதவிகளில் இருந்தவர்கள். அவர்களுடன் நான் போட்டியிட முடியாது திகைத்தேன். எனினும் நியாயம் என்பக்கம் இருந்ததால் அரசிடம் முறையிட்டேன். மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்கள், ‘காலம் கருதி இடம் கருதி செய்வினையின் மூலம் கருதி’ ஒன்றரை யாண்டுக்காலம் அமைதியாக இருந்து அதை எங்களுக்கே தந்து உதவினார்கள். நாங்கள் மகிழ்ந்ததைக் காட்டிலும் ‘அறம்வென்றது’ என்று மகிழ்ந்தார் அன்று வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்த மாண்புமிகு திரு. இராகவானந்தம் அவர்கள்.

தமிழறிஞர்களுக்கு அவர்கள் செய்த மற்றொரு உதவி மறக்கற்பாலதன்று. மருத்துவக் கல்லூரியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/107&oldid=1127612" இலிருந்து மீள்விக்கப்பட்டது