பக்கம்:ஓங்குக உலகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிஞரும் ஆவர்

105


(M.B.B.S. வகுப்பிற்கு) தமிழறிஞர் தம் பிள்ளைகளுக்கெனத் தனியாக இடம் ஒதுக்கிய பெருமை நம் முதல்வர் அவர்களுக்கே உண்டு. தொடக்கத்தில் மூன்று இடமாக இருந்தது; இன்று ஐந்து இடமாக உயர்ந்துள்ளது. இந்த ஒதுக்கு முறையிலே முதல் முதல் இடம் பெற்றவர் என் பெயர்த்தியே என்பதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். இன்று பிற மாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்பெறுகின்றது.

தமிழ்ப் பல்கலைக்கழகம் கண்டவர் நம் முதல்வர். தமிழின் தொன்மை மேன்மை இனிமை முதலியவற்றை வளர்க்க வழிகண்ட இவர்தம் இதயத்தை என்னென்று போற்றுவது! அத் தமிழ்ப் பல்கலைக்கழக முதலாவது ஆட்சிக்குழுவில் என்னையும் உறுப்பினனாக்கிப் பெருமைப் படுத்தினார்கள். ஒருமுறை அப் பல்கலைக்கழகக் கூட்டம் சென்னையில் நடந்தது. முதல்வர் தலைமை தாங்கினார். கல்வி அமைச்சரும் இலங்கை அமைச்சர் ஒருவரும் (திரு. தொண்டைமான் என எண்ணுகிறேன்) வந்திருந்தனர். நிகழ்ச்சிகள் முறையாக நடைபெற்றன. ஆயினும் தலைவர் பேசவில்லை. அவர் கருத்துக்கு மாறாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு செயலைச் செய்து விட்டார். அந்த நிலையில் அவர் பேச விரும்பவில்லை போலும். எனினும் கையில் பேசுவதற்குரிய குறிப்புச் சுருள் இருந்ததைக் கண்டேன். கல்வி அமைச்சர் அவர்கள் சொல்லியும் பேசவில்லை. நான் அச்சத்தோடும் பணிவோடும் மெல்ல எழுந்து, ‘ஐயா! தாங்கள் பேசா விட்டால் எங்கள் மனம் அமைதியுறாது ஏன்? உங்களுக்குந்தான்! குறிப்பையும் கொண்டு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துங்கள்’ என்றேன். அவர்களும் உடனே எழுந்து பதினைந்து நிமிடம் பேசினார்கள். மற்றவர் மாறுபட்ட நிலையினையும் பிறவற்றையும்


ஓ.—7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/108&oldid=1127782" இலிருந்து மீள்விக்கப்பட்டது