பக்கம்:ஓங்குக உலகம்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
112
ஓங்குக உலகம்

கொண்டனர். ஆயினும் பின்வந்த தமிழ் மக்கள் தற்புகழ்ச்சிப் பெயர்களைத் தள்ளி, பண்டைத் தமிழ்ப் பெயர்களையே கொண்டனர். ஒரு சில சான்று காணலாம்.

‘உலக மாதேவீச்சுரம்’ என்று அரசியின் பெயரால் மாற்றப்பெற்ற செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊர் இன்னும் ‘மணிமங்கலம்’ என்ற பழைய பெயராலேயே உள்ளது. ‘இராசராசச் சதுர்வேதி மங்கலம்’ என்று புகழ் பாராட்ட அமைந்த ஊர், அதன் இயற்பெயரால் ‘உக்கல்’ என்றே இன்றும் உள்ளது. ‘கம்ப மாதேவீச்சுரம்’ என்று சுட்டப்பட்ட ஊர், ‘சிற்றீஞ்சம் பாக்கம்’ என்ற பெயராலேயே இன்றும் உள்ளது. தம்மை மறந்து அடியவர் புகழ் பாடிய சேக்கிழாரைப் போற்றிய அநபாயனும் புகழுக்கு அடிமையானான் போலும். அநபாய நல்லூர் என ஓரூரை அழைத்தான் (அதைச் சேக்கிழாருக்கு மானியமாகவும் அளித்திருக்கலாம்.) எனினும் தமிழ் மக்கள் அவ்வூரை ‘அரும்பாக்கம்’ என்ற இயற்பெயராலேயே இன்னும் அழைக்கின்றனர். தஞ்சை நாட்டுப் ‘பழையாறை’ என்னும் ஊரை, மாற்றார் முடிகொண்ட பெருமையை விளக்குமுகத்தான் ‘முடி கொண்ட சோழபுரம்’ என ஆக்கிய ‘தற்பெருமையை’ அழித்து அதை இன்றும் ‘பழையாறை’ என்றே தமிழர் பாராட்டுகின்றனர். வீரநாராயணபுரம் என்ற தற்பெருமைப் பெயர் மாறி ‘காட்டுமன்னார் கோயில்’ என்ற இயற்பெயரே வாழ்கின்றது. இவ்வாறு இன்னும் எத்துணையோ பெயர்கள். தமிழர் காலப் போக்கில்-அவர்தம் பண்பாட்டை நழுவ விடாமல் காப்பாற்றும் திறம் பெற்றவர்கள் என்பதையும் தற்பெருமையையும் பிற வீர, செல்வ வளங்களால் காணும் சிறப்புக்களையும்