பக்கம்:ஓங்குக உலகம்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
114
ஓங்குக உலகம்

கால்கொண்ட சமயங்களின் தலைவர்கள் அமைத்த ஊர்களும் உள்ளன.

இடைக்காலத்தில் தமிழகத்தில் வடமொழியாளர் ஆதிக்கம் மிக்கிருந்த நிலையினை அனைவரும் அறிவோம். அவர்கள் தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை மட்டுமின்றி, சமயநெறி, வாழ்க்கைமுறை, தமிழர்தம் பெயர்கள் முதலிய அனைத்தையும் மாற்றி அமைக்க வழிகோலினர். மொழியில் வடமொழியைப் புகுத்தி ‘மணிப்பிரவாளம்’ என்றே புது வகை மொழியை வளர்க்க நினைத்தனர். எனினும் அறிவுடைத் தமிழினம் அம்மொழியை ஒதுக்கித் தள்ளிய்து. ஆயினும் எப்படியோ பல ஊர்களின் பெயர்களை அவர்கள் எளிதில் தம் வடமொழிப் பெயர்களாக அமைத்துக் கொண்டனர். அவ்வாறு அமைத்துக் கொள்வதில் அவர்கள் எத்தனையோ தவறுகளைச் செய்துள்ளனர். பல புரியாத தமிழ்ச் சொற்களுக்குத் தங்கள் மனம் போன போக்கில் மொழி பெயர்ப்பினைச் செய்து கொண்டனர். மயிலாடு துறைக்கு ‘மாயூரம்’ எப்படி மொழி பெயர்ப்பாகும்? ‘குடமூக்கு’க்கு எப்படிக் கும்பகோணமாகும்? இவ்வாறு எத்தனை எத்தனையோ. ஒரு சில பொருந்திய மொழி பெயர்ப்புக்களாக உள்ளன. மறைக்காடு ‘வேதாரணிய’மாயிற்று; .ெவண்காடு ‘சுவேதவன’மாயிற்று. மதுரை கடம்பவனமாயிற்று. பழமலை பழைய மலையாகிப் பிறகு முதுகுன்றமாகிப் பின் ‘விருத்தாசல’மாயிற்று. மேலைநாட்டார் தம் ஒலி முறைப்படி சில தமிழ்ப் பெயர்களை உருமாற்றினர். தரங்கம்பாடி ‘டிரங்கோபார்’ ஆயிற்று, தஞ்சை ‘டேஞ்சூர்’ ஆயிற்று. ஐயாறு ‘திருவாடி’ ஆயிற்று. அவையும் தம்பழம் பெயர் கெடாமல் வாழ்வது மகிழ்ச்சிக்குரியதே. இவ்வாறு பலவற்றை அவர்கள் மாற்றியமைத்தார்களாயினும்