பக்கம்:ஓங்குக உலகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

ஓங்குக உலகம்


என்ற பாட்டில் மணிவாசகர் இருவேறு வீட்டின்பங்களையும் இயைத்து, அவை பெறப் பெற-உற்று உணர உணர-துய்க்கத் துய்க்க எல்லையற்று வளர்ந்துகொண்டே இருப்பவை என்ற உண்மையை உணர்த்திச் சென்றார். இரு வேறு எல்லைகளின் இறுதியில் உள்ள இன்பங்களையும் அவற்றின் வளரும் தன்மையையும் காட்டி, இதனால் இவற்றிற்கு இடைப்பட்ட பிற அனைத்தும், இந்த நிலையில் கணக்கிடக் கூடியவையே என்ற உண்மையையும் அடியவருக்கு உய்த்துணர வைத்தார். எனவே உலகில் நம் கண்கொண்டு மண்ணும் விண்ணும் மட்டுமின்றி, காணாத அளவிலா எல்லையுடைய அண்டகோளமும் இவ் விளக்கத்துக்குள் அடங்க வேண்டியதே யாம்.

மணிவாசகரைப் போன்றே வள்ளுவர் உலக வீட்டின்ப வளர்ச்சியையும் வளத்தையும் பெருக்கத்தையும் காட்ட விழைந்தார். அவர் வெளிப்படையாகவே காணக் காண-அறிய அறிய-அளக்க அளக்க-அது எல்லையற்றுப் பெருகிக் கொண்டிருப்பது என்று உணர்த்திச் சென்றார்.

‘அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறி தோறும் சேயிழை மாட்டு’

(குறள்)

என்பது அவர் வாக்கு. உற்ற இல்லற வாழ்வில் தலைவியோடு பெறும் இன்பம் தரணி வாழ் உயிர்கள் அனைத்துக்கும் பொது-அனைவரும் அறிந்தது. இந்த அறிந்த உண்மையைக்கொண்டு இருவரும் அறிய இயலாத பல உண்மைகளை உலகுக்கு உணர்த்த நினைத்தனர். எனினும் இலக்கண அமைப்பில் உவமானம் உபமேயமாகவும், உபமேயம் உவமானமாகவும் வருகின்ற மரபை ஒட்டியும் தாம் எடுத்துக்கொண்ட ‘காதற் சிறப்பு’ என்ற பொருள்பற்றியும் இருவரும் இவ் வகையில் தத்தம் பாடல்களைப் பாடியுள்ளனர். நாம் இங்கே இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/121&oldid=1127787" இலிருந்து மீள்விக்கப்பட்டது