பக்கம்:ஓங்குக உலகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

ஓங்குக உலகம்


வள்ளுவர் கூற்றின்படி, வாசகர் கூற்றின்படி, இவர்கள் அறியாதவர்கள்தாமே. மிகப்பெரிய தொலைநாடியால் மிக உயர்ந்ததாகத் தாம் எண்ணும் ஓரிடத்திலிருந்து கண்டவையே முடிந்த பொருள் என்றும் எனவே அண்ட கோளம் இத்தனை ஆண்டுகளுக்கு முன் முதலாக அமைந்தது என்றும் யாராவது கணக்கிடுவார்களாயின் அவர்கள் தவறிழைத்தவர்களே ஆவார்கள். சற்று நின்று நிலைத்து ஆய்ந்து-அறிந்து-எண்ணிப் பார்ப்பின் இவ்வுண்மை விளங்காமற் போகாது.

இன்று விண்வெளிப் பயணம் மிக எளிதாக அமைந்து விட்டது. மண்ணில் நின்று மிகப்பெரிய தொலைநாடிகளின் துணையால் காணமுடியாத பல அண்டகோள உண்மைகளை விண்வெளியில் நின்று கண்டறியலாம் எனவும், இந்த முறையில் முயன்றால் பேரண்ட கோளத்தின் எல்லையையும் வயதையும் அளவிடலா மென்றும் சிலர் தவறாகக் கணக்கிடுகிறார்கள். அவர்கள் ‘அறிதோ றறியாமை கண்டற்றால்’ என்ற வள்ளுவர் வாக்கை மறந்தவராதலால் அந்த விண்வெளியிலோ அதற்கப்பாலோ நின்று ஆராய்ந்தால் இப்பேரண்டத்தின் எல்லை மண்ணிலிருந்து காண்பதைக்காட்டிலும் மிகமிக விரிந்து அளவிட முடியாததாக அமையும் என்பதையும் அவர்கள் அண்மையில் உணரப்போகிறார்கள். மனிதனுடைய இன்றைய பேரண்ட ஆராய்ச்சியும் காணாது நெடுந்தொலைவு வரைவற்று விரியும் அண்ட முகட்டின் எல்லையும் உவமை வாயிலாய் கூறவேண்டுமாயின் முடியாது. எனினும் ஓரளவு எண்ணிப் பார்க்கலாம். இன்றைய ஆராய்ச்சியில் காணும் அண்டவெளியோடு சிறு விரல்களுக்கு இடையில் உள்ள சிற்றிடத்தை ஒருமைப்படுத்திக் காணில் எத்துணை வேற்றுமை உண்டோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/123&oldid=1127675" இலிருந்து மீள்விக்கப்பட்டது