பக்கம்:ஓங்குக உலகம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

ஓங்குக உலகம்


வருகின்றது. வீட்டு வாழ்வையே வெளி வாழ்வுக்கும் விண்வெளி அமைப்பிற்கும் பேரின்ப வீட்டிற்கும் உவமையாகவும் உற்றதாகவும் காட்டி விளக்கும் அடியவர் இப் பேரண்டத்தையும் அதிலுள்ள அண்டகோள முட்டைகளையும் வீட்டில் காணும் ஒரு சிறு நிலை காட்டியே விளக்குகின்றார். வீட்டில் நாம் காணும் எத்தனையோ நிகழ்ச்சிகள்-செயல்கள்-அமைப்புகள் ஆகியவை பற்றிச் சிந்திப்பதில்லை. நல்லவர் சிந்தியாமல் இருப்பதில்லை. அவ்வாறு சிந்தித்த மணிவாசகர் உள்ளத்தில் ஊற்றெடுத்த ஓர் உண்மையினையே ஈண்டு நான் குறிக்க நினைக்கிறேன்.

வீட்டுக் கூரையில் சிறு புழை இருப்பின் அதன் வழி சூரிய ஒளி புகுவதை அனைவரும் அறிவோம். அச் சிறிய புழை சதுரமாகவோ-நீண்ட சதுரமாகவோ வேறு வகையிலோ இருப்பினும், அதன் வழிவரும் ஒளி தரையில் விழும்போது வட்டமாகவே விழுவதைக் காண்கிறோம். இங்கே சூரிய மண்டலத்தைப் பேரண்டமாகக் கொண்டால்-அதன் எல்லைக்குட்பட்ட பல கதிர்களில் ஒரு துகள் வீட்டுப் புழைவழியாக நுழைந்து கடைசியில் வட்ட வடிவம் பெறுவது போன்று, பேரண்டத்தினின்றும் அண்ட கோளப் பெரு உருண்டைகளிலிருந்தும் பல்வேறு வடிவங்களிலிருந்து உருவாகும் பொருள்கள் இறுதியில் உருண்டை வடிவம் பெறுகின்றன என்பதை உணர்தல் வேண்டும். இனி இந்த உவமையை மறந்து மற்றொன்றைக் காண்போம்.

வீட்டில் நுழையும் அந்தச் சிறு கதிர் ஒளியின் நடுவே உற்றுப் பார்ப்பவர் சிலர். அவ்வாறு பார்க்கும்போது எத்தனையோ எண்ணற்ற தூசுகள் நம் கண்ணுக்குத் தெரியும். ஆய்வு ‘நாடி’ வைத்துப் பார்ப்பின் இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/129&oldid=1127698" இலிருந்து மீள்விக்கப்பட்டது