பக்கம்:ஓங்குக உலகம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காகிதம்......... சீன நாட்டின் பங்கு

129



அச்சுக்கலையை நாகரிகத்தின் தாய் எனப் போற்றுவர். அந் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைந்ததால், மக்கள் கருத்துக்களையும் ஆசை அல்லது உணர்வுகளையும் உலகெங்கும் பரப்பவும் பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்தப் பெறுகின்றது. இன்றைய மேலைநாட்டுப்புதுமை வாழ்விற்கு அடிப்படையான நான்கு கண்டுபிடிப்புக்களுள் (வெடி மருந்து, திரைகாட்டி என்ற இரண்டு தவிர்த்த) தாள், அச்சு ஆகிய இரண்டும் சீனர்தம் கண்டுபிடிப்புக்களே. தாளும் அதன் வழித் தோன்றிய அச்சுக்கலையும் கண்டுபிடித்ததை ஒப்ப, வேறு எதையும் பழங்கால மனிதனின் வெற்றிக்கு அல்லது சாதனைக்கு மிக முக்கியமானதாகச் சொல்ல இயலாது. தாளும் அச்சுக்கலையும் இன்றையமனித அறிவு வெளியில் நெடுந்தூரம் ஒளி காட்டும் தன்மையில் அமைகின்றன. தாள் இல்லாதிருந்து அச்சுக்கலையும் தோன்றாதிருப்பின் இன்றைய மனித வாழ்வு என்னாகும் எனக் கற்பனை செய்து காண முடியுங்கொல்? வேறுபல செய்தி விளக்க வழிகள் இருப்பினும், அவை, அடிப்படையான நிலைத்த இத் தாள், அச்சு இவற்றிற்கு மாற்றாக அமைய முடியர்.

சீன நாட்டில் தாளின்
தோற்ற வளர்ச்சியும் பயனும்

தாள் அல்லது காகிதம் ஒரு நல்ல அரிதட்டி வழி நீர்கழிய நிற்கும் ஒட்டுப் பற்றாகிய நார்ப் பொருளால் ஆகியதாகும். நீங்கிய பின் ஒருவிரிந்த நார்ப்பொருளே உலர்ந்து தாளாகின்றது. காகிதம் செய்யும் கலைபற்றிய தொடக்க நாளிலிருந்து, இருபது நூற்றாண்டுகளுக்கும் பிறகும், அதன் வளர்ச்சி மாறி அதற்கென அமைந்த துணைக் கருவிகள் சில வேறுபட்ட போதிலும், அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/132&oldid=1127710" இலிருந்து மீள்விக்கப்பட்டது