பக்கம்:ஓங்குக உலகம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

ஓங்குக உலகம்


வழிபாட்டில் பெருவாரியாக எரிக்கப்பட்டதையும் சீன நாட்டிற்குத் தொடக்கத்தில் சென்றவருள் ஒருவரான மார்க்கபோலோ என்பார் கண்டிருக்கிறார். இத்தாள் காகிதப்பணம், விளையாட்டுச் சீட்டு போன்றவையும் பிற காகிதப் பொருள்களும் அச்சுக்கலையும் மங்கோலியர்தம் வளர்ச்சி வளர வளர உலகின் பிற பாகங்களுக்கும் பரவத்தொடங்கின. சீனப் பேராகிய ‘சாவ்’ (cau) என்னும் பணப்பெயர் கொண்ட காகிதப்பணம் பாரசீகத்தில் முதல் முதல் கி.பி. 1294ல் ஏற்றுக்கொள்ளப்பெற்றது. ஐரோப்பிய நாட்டு (மேலைநாட்டு) வங்கிகளின் கணக்கு முறை, சேமிப்பு, சான்றிதழ் போலச் சிலவும் சீன முறைகளைப் பின்பற்றி அமைந்தன என்று சொல்லப்படுகின்றது.

சுவரொட்டித் தாள்களுக்கும் பிறப்பிடம் சீனமேயாகும். அது பதினாறாம் நூற்றாண்டில் பிரஞ்சு நாட்டுச் சமயத் தொண்டர்களால் ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டுவரப்பெற்று, பதினேழாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப் பெற்றது. அத் தாள் எக்காலத்திலிருந்து சீனத்தில் பயன்படுத்தப் பெற்றதென்பது காணமுடியாது. எனினும் மிகப் பழங்காலத்திலிருந்தே வண்ணம் தீட்டப் பெற்ற கைவண்ணக் கவின் புனைந்த பல தொங்குச் சுருள்கள் சீன வீடுகளை அழகு செய்தன என அறிகிறோம். இத்தகைய தொங்குச் சுருள்களே மேலை நாட்டு வீடுகளில் முதலில் தொங்கும் நிலையில் பொருத்தப் பெற்று, பின் சுவர்களில் ஒட்டப் பெற்றிருக்கக் கூடும் எனக் கருத இடமுண்டு.

சீன அச்சின் தோற்றமும் வளர்ச்சியும்

காகிதத்தாற் செய்யப்பெற்ற நூல்கள் எளிமையில் பெறக் கூடியனவாயும் எடுத்துச் செல்லத் தக்கதனவாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/137&oldid=1127727" இலிருந்து மீள்விக்கப்பட்டது