பக்கம்:ஓங்குக உலகம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காகிதம்...சீனநாட்டின் பங்கு

137



அச்சுக்கான மரக்கட்டைகள் அனைத்தும் மென்மையும் ஒரே தன்மையும் அமைப்பும் கருதி இலை உதிர்மரங்களாகிய பேரி, இலந்தை, போன்றவற்றிலிருந்தும் சில சமயம் ‘ஆப்பில்’ பழத்திலிருந்தும் கொள்ளப்பெற்றன. எழுதப்பெற்ற மெல்லிய தாளினை, தலைகீழாகத் திருப்பிக் கூழ்ப்பசையினால் (கஞ்சியினால்), அம் மரக்கட்டைகளில் ஒட்டுவர். அக் கூழ்ப் பசை காய்ந்த பிறகு தாளின்பின் பக்கம் மெல்லச் சீவி எடுக்கப்பெற மெல்லிய அந்த எழுத்து வடிவங்கள் அம் மரக் கட்டைகளில் தலை கீழாகத் தெரியுமாறு அமையும். பின் சறுக்கு சட்டக் கருவி, குந்தாலி, உளி முதலியவற்றால் அவ்வெழுத்துக்களைச் சுற்றியுள்ள தேவையற்ற மரப்பகுதிகளை வெட்டி எடுப்பர். இவ்வாறு மர அச்சுக்கட்டை தயாரானதும் ஒரு மயிர்த் தூரிகையினால் அதன் மேல் மை பூசுவர். பிறகு ஒரு தாளை அந்த மையிட்ட மர அச்சின் மேல் வைத்து, பின்புறத்தைத் தூரிகையினால் மெல்ல வருடுவர். பின் அத் தாள் அச்சிட்ட தாளாகும். இவ்வாறு இருபுறம் அச்சிட்ட தாள் 1500 அல்லது 2000 வரை திறனுடை அச்சடிப்பர் ஒருநாளில் அச்சிட்டார் எனச் சொல்லப் பெறுகின்றது.

இத்தகைய சீன அச்சுக்கலை. பதினோறாம் நூற்றாண்டில் அசையும் தனி அச்சு எழுத்து புகுத்திய போதும் பதினான்காம் நூற்றாண்டில் பலவண்ண அச்சு நுழைந்தபோதும் மேலும் வளர்ச்சியுற்றது. அக்காலத்தில் ஆவணம் ஒன்றினைக் கொண்டு, பீ செங் (Be sheng) என்ற தொழிலாளி ஒருவரால் கி.பி. 1041-1048 ஒட்டி, மண்ணால் செய்யப்பெற்ற அச்செழுத்துப் பெட்டி பயன்படுத்தப் பெற்றதென அறிகிறோம். அவன் நல்ல மெல்லிய களிமண்ணால் எழுத்துக்களைச் செய்து,

ஓ.—9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/140&oldid=1127791" இலிருந்து மீள்விக்கப்பட்டது