பக்கம்:ஓங்குக உலகம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காகிதம்...சீனநாட்டின் பங்கு

143


சிசிலித்தீவின் வழி இத்தாலியா நாட்டிற்கு இக் காகிதம் செய்யும் தொழில் வந்திருக்கலாம். இத்தாலிநாட்டில் நகர்களான பாபிரியானா (Babriyana) போலோக்னா (Bologra) ஜினோவா (Genova) ஆகியவற்றில் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பிரான்சு ஜர்மனி நாடுகளில் பல நகரங்களில் பதினான்காம் நூற்றாண்டிலும் பல காகித ஆலைகள் தொழில் படத் தொடங்கின. 1390-ல் நூரம்பக்கில் (Nuremberg) காகிதச் சாலை கட்டிய புகழ்வாய்ந்த தாள் தயாரிப்பாளரான உல்மான்ஸ்டாமர் (Ulma stramar) என்பவர் சீனநாட்டில் உபயோகித்த மை போன்றதாகிய கருவிகளையும் நீர் குழம்பாக்கி வடிகட்டும் முறை உள்பட பல முறைகளையும் பயன்படுத்தினார். நெதர்லேண்ட் (Netherland) சுவிஸர்லேண்டு (Swizerland) இங்கிலாந்து நாடுகளில் பதினைந்தாம் நூற்றாண்டிலும் புது உலகமாகிய அமெரிக்காவில் பதினாறாம் நூற்றாண்டிலும் இக்காகிதம் செப்யும் தொழில் தொடங்கப்பெற்றது. அமெரிக்கா நாட்டில் மெக்சிகோவில் (Mexico) கி. பி. 1580-லும் பிற குடியேற்ற நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டிலும் இத்தொழில் இடம்பெற்றது.

நீண்ட பதினைந்து நூற்றாண்டின் நெடும் பயணவழி இக்காகிதம் (தொழில்) சீனநாட்டிலிருந்து உலகில் எல்லாப் பகுதிகளுக்கும் சென்றது. இன்றைய ஐரோப்பிய அச்சுக்கலை சீன அச்சுக்கலையின் செல்வாக்கால் (திறமையால்) வளர்ந்தது என்ற கொள்கை ஆய்வின் பாற்பட்டதேனும், சீன அச்சுக்கலையும் சீனத்தில் அச்சிடப்பெற்ற பல பொருள்களும் ஐரோப்பாவில் முதல் அச்சுப்பணி தொடங்குவதற்கு முன்பே நன்கு அறிமுகமாகி இருந்தன, சீனாவிலேயே காகிதம் தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/146&oldid=1127888" இலிருந்து மீள்விக்கப்பட்டது