பக்கம்:ஓங்குக உலகம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எத்தனை அகத்தியர்?

145


கடலைக் குடித்தல் மலையை அடக்கல் போன்ற பெரிய செயல்களைச் செய்தார் என்ற வரலாறு உள்ளமையே இதற்குக் காரணமாகும். தமிழில் அகத்தியர் தேவாரத் திரட்டு, அகத்தியர் வாகடம், அகத்தியர் மருத்துவ நூல் முதலியன அளவிற் சிறியனவே. எனவே அகத்தியர் உருவம் சிறியதென்பதைத் தமிழர் பழங்காலத்தில் அறிந்திருந்தனர்.

பதின்மருக்கு மேலான அகத்தியர்கள் பாரத நாட்டில் வாழ்ந்திருந்தார்கள் என்பதற்குப் பல கதைகள் உள்ளன. திரிபுராதிகள் காலந் தொடங்கிச் சித்த வைத்தியர் காலத்தில் வாழ்ந்த அகத்தியர் வரையில் பலர் குறிப்பிட்ப் பெறுகின்றனர். அவர்கள் அனைவரைப் பற்றியும் நான் இங்கு ஆராயப் போவதில்லை. கந்த புராணத்தில் வரும் அகத்தியரே எண்ணத்தக்கவர். கச்சியப்பர் அவரைத் ‘தமிழ்முனி’ எனக் கூறியதனாலே இத்தவறு ஏற்பட்டது. பார்வதியின் திருமணத்தின்போது அகத்தியர் உள்ளிட்ட அனைவரும் இமயமலைக்கு வர, வடக்குத் தாழ்ந்து தெற்கு உயர, அதைச் சரி செய்யச் சிவபெருமான் அகத்தியரைத் தெற்கு நோக்கி அனுப்பினார் என்பர். அவரே வழியில் சிலவிடங்களில் தங்கிப் பிறகு பொதிய மலையில் இருந்து தமிழாராய்ந்தார் என்பர். இக்கருத்து ஒன்றினையே நான் ஆராய நினைக்கின்றேன். அகத்தியர் என்பவர் இருவர் இருந்திருக்கலாம். ஒருவர் வட நாட்டிலும் ஒருவர் தமிழ்நாடடிலும் வாழ்ந்திருக்கலாம். இருவருக்கும் உள்ள பெயர் ஒற்றுமையின் காரணத்தாலேயே அவ்வாறு பலர் மயங்க நேரிட்டது. ‘அகத்தியர்’ என்ற தமிழ்ச் சொல் ‘உள்’ எனக் காணும் அகத்தின் நல்லியல்பின் அடிப்படையில் ‘உள்ளொளி’ அடிப்படையில் (அகத்து - இயர்) பிறந்த பெயர். அகஸ்தியர் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/148&oldid=1127901" இலிருந்து மீள்விக்கப்பட்டது