பக்கம்:ஓங்குக உலகம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

ஓங்குக உலகம்


வடமொழிப் பெயர் ‘மலையைத் தம்பிக்கச் செய்தவர்’ என்ற அடிப்படையில் பிறந்ததாகும்; எனவே பெயரைப் பகுத்துக் காணின் இரண்டும் ஒன்றாகவே தோன்றினும் அடிப்படையில் மாறுபட்டிருப்பதை அறிகிறோம். மற்றும் கந்தபுராணத்தில் விளக்கிக் காட்டப்பெறும் அகஸ்தியரைப் பற்றிக் குமாரசம்பவம் பாடிய காளிதாசர் குறிப்பிடவே இல்லை. இதனையும் எண்ண வேண்டியுள்ளது. அவரது நூலுக்கு மூலமாகிய மகாசிவபுராணத்திலும் இக் குறிப்பே இல்லை என்பர். இக் குமார சம்பவத்தில் முதல் ஐந்து பகுதிகளையே காளிதாசர் பாடினார் என்றும் பிற பகுதிகளைப் பிறகு யாரோ பாடிச் சேர்த்துவிட்டனர் என்றும் கூறுவர், எனவே இதைக் கொண்டு அகத்தியர் வாழ்வை அறுதியிட முடியுமா? அப்படியேகொண்டாலும் தென்கோடியில் பொதிய மலையில் தமிழை ஆராய்ந்து தமிழ்ச்சங்கம் அமைத்துக்கொண்டு வாழ்ந்த அகத்தியர் மற்றவர் எனக்கொள்ளலே பொருந்தும். பின்னவர் தெற்கு நோக்கி வந்து எங்கே தங்கினார்? இதற்கு விடை கண்டால் முடிவு பெறலாம்.

தெற்கு நோக்கி வந்த அகஸ்தியரை விந்தியமலை தடுத்ததென்றும் அதை அடக்கி மேலும் அவர் தெற்கே சென்றார் என்றும் கதை உள்ளது. விந்தியம் தடுத்தலும் அடக்க நினைத்தலும் என்னென்ன செயல்கள்? ஆம்! ஆரிய மரபினரான அகத்தியரை விந்தியமலைக்குத் தெற்கே உள்ள வேற்று நாகரிகமும் பண்பாடும் வராமல் தடுத்தன என்பதே அதன் பொருள். எனினும் அவர் முயற்சியுடன் ஓரளவு வெற்றி கண்டு, அடக்கி, உள்செல்ல முயன்றும் பஞ்சவடியிலேயே தங்கிவிட்டார் என அறிகிறோம். அகத்தியரைப் பற்றி ஆராய்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/149&oldid=1127904" இலிருந்து மீள்விக்கப்பட்டது