பக்கம்:ஓங்குக உலகம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளுவர் வகுத்த அரசு

153


தாம். எனினும் இந்த ஆட்சி பற்றியோ ஆட்சி அடிப்படையில் அமைந்த பிற நிலைகள் பற்றியோ பேசும் போது ‘மக்களியல்’ என்றோ ‘அமைச்சியல்’ என்றோ நாம் கூறுகிறோமா? மாறாக ‘அரசியல்’ என்றே பேசுகிறோம். ஆக, ‘அரசியல்’ என்பது நாட்டாட்சிக்கு-அதன் அங்கங்களுக்கு-அவை பற்றிய அறநூலுக்கு-ஆக்கநூலுக்கு-பேச்சுக்கு-செயலுக்கு-பொதுப் பெயராக அமைகின்றது. வள்ளுவர் அரசியல் இத்தகையதே அங்கே ஆளுபவனை அரசு, அரசன், வேந்து, மன்னன் என்ற சொற்கள் குறிக்கின்றனவேனும் அவனும் பரம்பரையாக ஒரே மரபில் வருகின்றவன் எனக் குறிக்கவில்லையே. ஆளுகின்ற எவனையும் அச் சொல் குறிப்பதில் தவறில்லையே. இன்றைக்கும் இந்த நிலையில் மாநில ஆளுநர்களும் மத்திய குடியரசுத் தலைவரும் உள்ளனரே. அமைச்சர்கள் தவறு இழைப்பின் அவர்களைத் தள்ளி ஆளுநரும், குடியரசுத் தலைவரும் தாமே பொறுப்பேற்று நாட்டை நடத்திச் செல்லும் சட்டம் உள்ளதல்லவா! இது மட்டும் எப்படி மக்களாட்சி யாகலாம்? அன்று அமைச்சர் இருந்தனர்; அறவோர் இருந்தனர்; ஆணையர் இருந்தனர்; அருங்குடி மக்களும் இருந்தனர். அவர்களுக்கு மேலாக அரசன் இருந்தான். இன்று இருப்பதுபோலவே அன்றும் ஆட்சி இருந்தது எனக் கொள்ளல் தவறகாது. ‘ஜனாதிபதி’, ‘பிரசிடெண்டு’, ‘வைஸ்சிராய்’ ‘கவர்னர் ஜெனரல்’ ‘கவர்னர்’ என்று பல ஆட்சியாளர்கள் மக்கள் ஆட்சியால் நாடாளுவதைக் காண்கிறோம். இவர்கள் ஆட்சி எப்போதோ தேவைப்படும் என்றாலும் இவர்கள் என்றும் நிலைபெற்றவர்களாய் உள்ளமையைக் காண்கின்றோம். இதே நிலையில் அன்றும் மன்னர்கள் வாழ்ந்தனர் எனக்

ஓ.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/156&oldid=1127947" இலிருந்து மீள்விக்கப்பட்டது