பக்கம்:ஓங்குக உலகம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

ஓங்குக உலகம்


கொள்ளல் பொருந்தும். இன்றைய நிலையினும் அன்று அவர்கட்கு அதிக அதிகாரங்கள் அளித்திருக்கலாம். இன்றும் சட்டமன்றங்களும் பாராளுமன்றமும் எத்துணைச் சட்டங்கள் செய்யினும் அவை தலைவர் கையெழுத்தினைப் பெற்ற பிறகன்றோ நாட்டுச் சட்டமாக்கப் பெறுகின்றன. அவசரச் சட்டங்களும் அவருடைய கையொப்பத்தினைப் பெற்றே வெளிவர வேண்டுமல்லவா? ஆங்கில நாட்டு ‘அரசி’யின் நிலையும் நேபாள நாட்டு ‘மன்னர்’ நிலையும் எத்தகையன? அங்கெல்லாம் முடியாட்சிதான் நடைபெறுகிறதென்று யாரேனும் கூற முடியுமா? மக்கள் எண்ணத்துக்கு முன் மன்னவன் மண்டி இட்டே ஆகவேண்டும் என்ற உண்மையை எட்டாம் எட்வர்டு முடிதுறந்த வரலாறு நமக்குக் காட்டவில்லையா! எனவே இந்த வகைகளுள் ஒன்றினாலே அன்றைய அரசன் ஆட்சியைத் தக்கார் வழி காட்டச் சூழ்வார் கண்ணாக நின்று ஆண்டிருப்பான் என்று கொள்ளுவதே பொருந்தும். இந்த நிலையிலேயே அமைச்சர்களும், சூழ்வார்களும் கண்ணாக நின்று காட்டித் தெளிவிக்கத் தெளிந்த ஆணை செலுத்தும் மன்னனாக அன்று அவன் விளங்கினான். மேலும் அரசியலில் கூறும் பலவும் அனைவருக்கும் பொருந்துவனவே. உதாரணமாக இறை மாட்சிக்கு அடுத்த கல்வியையே எடுத்துக் கொள்வோம்.

கல்வி அரசியலில் வந்துள்ளமையின் மற்றைய அமைச்சர்களுக்கும் பிற குடிமக்களுக்கும் அக் கல்வி தேவை இல்லாதது என்று பொருள்படுமா? அது எவ்வாறு பொருந்தும்! இறை மாட்சியை அடுத்துக் கல்வியை வைத்திருப்பவர்கள். அந்த இறை கற்றவனாக இருப்ப தோடு, அவனை அந் நிலைக்கு உயர்த்துபவர்களும் கற்றவர்களாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே வைத்திருப்பார்கள். நம் நாட்டில் சில ஆண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/157&oldid=1127948" இலிருந்து மீள்விக்கப்பட்டது