பக்கம்:ஓங்குக உலகம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளுவர் வகுத்த அரசு

157


துணைக் கோடல்’ முதலிய அதிகாரங்களில் இறை, மன்னன், ஆள்வார் என்ற சொற்கள் வருகின்றனவேனும் அவை அனைத்தும் வழிவழியாக வரும் ஆள்வோரைக் குறிக்காதன என்பதை உணர்தல் வேண்டும். அப்படிக் குறிப்பின், உலகத்தால் ஒன்றும் செய்ய முடியாத அப் பரம்பரை மன்னர்களை இவ்வாறெல்லாம் இருக்க வற்புறுத்தல் தேவை இல்லை என்பதை வள்ளுவர் உணராரா? மேலும் மன்னன், இறை முதலியவற்றிற்கு உள்ள பல்வேறு பொருள்களும் நமக்கு வழிகாட்டுகின்றனவே! ‘மன்னன்’ என்ற சொல், எப்பொருட்கும் இறைவன், அரசன், (சேனைத்) தலைவன், கணவன், ஆடவன், (32-48 வயதுக்கு உட்பட்டவன்) உத்திரட்டாதி நாள் என்று பல பொருள்களில் வருகின்றது. அப்படியே ‘இறை’ என்ற சொல்லும் உயரம், தலை, கடவுள், தலைமை, நடுவு நிலைமை (கண்ணோடாது இறை புரிந்து - குறள் 541), தமையன், கணவன் எனப் பல பொருளில் வருகின்றது. ‘அரசு’ என்பதும் அரசன், இராச்சியம், அரசாட்சி, தலைமை, வேளாளர் பட்டப் பெயர் போன்ற பல பொருள்களில் வருகின்றது. இவற்றையெல்லாம் தொகுத்துக் காணின் நாட்டை ஆள, அக் காலத்தில் மக்கள் நல்ல அறிவுடையவராய், மக்களை ஒத்து நோக்கி நடப்பவராய், மக்கள் வாழ்வே தம் வாழ்வாக உள்ளவராய்க் குடும்பத் தலைவனைப் போன்றே நாட்டையே நல்ல குடும்பமாக நினைத்து வழி காட்டுபவராய், பெரியார் தம் துணைக்கொண்டு அவர் வழி கேட்டு இடித்துரைத்தால் தம் தவறுகளைத் திருத்திக் கொள்பவராய், குறித்த வயதின் எல்லைக்கு உட்பட்டவராய், நடுவு நிலைமை தவறாது, இன்னார் இனியார் என்னாது நேரிய அறம் உரைப்பவராய், நாட்டு வாழ்வின் அடிப்படை உழவே என்பதை உணர்ந்து அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/160&oldid=1127958" இலிருந்து மீள்விக்கப்பட்டது