பக்கம்:ஓங்குக உலகம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளுவர் வகுத்த அரசு

159


வள்ளுவர் நன்கு விளக்குகிறார். அதில் மன்னனை ஒருமையிலேயே குறிக்கின்றார். எனவே அவன் அந் நாட்டுத் தலைவனாக-‘இராட்டிரபதியாக’ வேண்டும். நல்ல அறிஞர் அமைச்சர் தொடர்பை அவன் விடுவதால் உண்டாகும் தீமையை அவர் விளக்கிக் காட்டியுள்ளார். பிற அதிகாரங்களி லெல்லாம் நேராக மன்னனுக்கு உணர்த்தும் அறவுரைகள் போன்றல்லாது பொது நெறியிலேயே அனைத்தையும் காட்டுகின்றார். அரசியல் இருபத்தைந்து அதிகாரங்களில் நாட்டில் நல்ல அரசு நிலவ வேண்டியதற்கு அடிப்படையான எல்லாவற்றையும் தொகுத்துக் கூறுகின்றார். செங்கோன்மை என்ற அதிகாரத்திலே மன்னவனைத் தனியாகக்காட்டுகின்றார். அதில் அரசன் உயிர்களோடு பிணைந்திருக்க வேண்டிய நிலையினையும் குடிகள் அரசனிடம் காட்டும் பரிவும் பற்றுமே அவன் பகைவரிடமிருந்து நீங்கிக் காக்கும் திறனையும், நாட்டில் சட்டமும் நீதியும் நேர்மையும் நிலைத்தாலன்றி அவன் வாழமுடியா வகையினையும் விளக்கிக் காட்டி, அவனுடைய நாட்டில் இயற்கை நலம் கெடாத வளம் கொழிக்கும் எனக் காட்டுகிறார். ஆக, மக்களால் தேர்ந்தெடுக்கப் பெறும் மன்னவன் குடிதழீஇ அக்குடிகளைப் புரந்து சிறக்கவேண்டும் என்று ‘செங்கோன்மை’ என்ற அதிகாரத்தில் விளக்கும் முறையிலேயே அச் செங்கோன்மைக்கும் குடிகளுக்கும் உரிய தொடர்பை வள்ளுவர் விளக்குகிறார். இதே கருத்தைத் தான் பின் கொடுங்கோன்மையிலும், மக்களைச் சூழாது செய்யும் அரசு கெடுவதோடு குடிகளையும் கெடுக்கும் என்றும், கோலோடு நின்றான் கொடுமை பெரிது என்றும் மக்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழுவராயின் மன்னன் வாழமுடியாது என்றும், அத்தகைய மக்கள் நலம் பேணா முதல்வன் நாட்டில் உடையவரும் இல்லாதவராவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/162&oldid=1127961" இலிருந்து மீள்விக்கப்பட்டது