பக்கம்:ஓங்குக உலகம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முரசுப்பாட்டு

163


சமயத்தாலும் நடைபெறும் மாறுபாடுகளையும் போராட் டங்களையும் நீக்க வேண்டும் என வற்புறுத்துகிறான் பாரதி. இன்று (1981-82ல்) நம் நாட்டில் காணும் பல்வேறு சாதி சமயப் பூசல்கள், நாம் பாரதி வாக்கைப் பின்பற்றாத காரணத்தாலேயே நடைபெறுகின்றன என்பதை உணர வேண்டும். ஊர் நன்றாக வாழ வேண்டுமாயின் இந்தப் பூசல்கள் வேண்டாம் என்பதை விளக்கத் தான் முதலாவதாக ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற முன்னுரையோடு தன் நீதிநெறியைச் சொல்லத் தொடங்குகிறான்.

முதலாவதாக ஊர் நன்றாகச் சிறக்க வேண்டுமானால் தெய்வ வழிபாடு இன்றியமையாத ஒன்று என்பதையே, தொடக்கத்தில் நெற்றி ஒன்றைக் கண்ணனையும் அவன் தன் நித்த சக்தியையும் வாழ்த்துவதன் மூலம் காட்டி விட்டான். ஆம்! ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஒளவைப்பாட்டியின் அறநெறி யன்றோ! ஆயினும் அந்தக் கோயில் இறை வழிபாடு-வெறும் கல்லாலும் மரத்தாலும் ஆகிய கோயிலாக அல்லாது, உள்ளத் தூய்மையோடு வேறுபாடற்ற சமுதாய உணர்வோடு ஆக்கப்பெற்ற கோயிலாக அமையவேண்டும் என்ப்தைத்தான் பாரதி அடுத்த அடிகளில் விளக்கிக் கொண்டு போகிறான்.

முதலில் மக்களிடையில் சாதி வெறியும் வேறுபாடும் தாண்டவமாடுவதைக் கண்டு கண்டிக்கிறான். சமுதாய நலனுக்காக-வேலைகளைப் பிரித்துக்கொண்டு வாழ்வதற்காக அமைத்துக்கொண்ட நால்வகைப் பிரிவுகள், எப்படி விஸ்வரூபமெடுத்து, சாதிகளாகி, தீண்டா நிலையில் சிலரைத் தள்ளிவைத்து, ஒருவனை ஒருவன் தொடவும் கூசி ஒதுங்கும் வகையில் நாட்டை நாசப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/166&oldid=1127976" இலிருந்து மீள்விக்கப்பட்டது