பக்கம்:ஓங்குக உலகம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

ஓங்குக உலகம்


படுத்தும் நிலையினை எண்ணி நடுங்கும் அவன் உள்ளத்திலிருந்து இந்த அடிகள் வருகின்றன.


‘நாலு வகுப்பும் இங்கொன்றே—இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே-செத்து
வீழ்ந்திடும் மானிட சாதி!

ஆம்! பாரதி காண்பது ஒரே சாதி-மானிட சாதிதான். இந்த வேறுபாடுகளால் அந்தமானிட சாதியே அடியோடு அழியும் என்று எச்சரிக்கை செய்கிறான் அவன்.

இந்த வேறுபாடு எப்படி நீங்கும் என்பதற்கு ஒரு குடும்பத்தையே உதாரணமாகக் காட்டுகின்றான். தந்தை, தாய், மகன், மகள் ஆகியோர் பலப்பல வகைகளில் பணிகள் இயற்றினாலும் ஒரே குடும்பமாக வாழ்வது போன்று, உலகக் குடும்பமும்-பாரத சமுதாயம் பல்வேறு பணிகளைப் பகுத்துச் செய்துகொண்டே ஒரே குடும்பமாக வாழ வேண்டும் எனச் சுட்டுகிறான். குடும்பத்தைப் பற்றி நினைக்கும்போது, அதன் தலைவி-மனைவி-அவள் முன் நிற்கிறாள். பல குடும்பங்களில் பெண்கள் இழிவாக நடத்தப்படுவதை எண்ணி, அதனாலும் சமுதாயம் சீரழியும் எனச் சுட்டுகிறான். ஆணும் பெண்ணும் இரு கண்களைப் போன்றவர்கள் என்று உவமை வாயிலாகக் காட்டி, அவர்கள் இருவரும் ‘கண் இரண்டும் ஒன்றையே காண்’ என்றபடி இயைந்து வாழவே வையம் தழைக்கும் எனச் சொல்லுகிறான். இறைவன் படைப்பில் இருவருக்கும் வேறுபாடு இல்லை. என்றாலும் மனிதன் வேறுபாடுகள் கற்பித்து மாதர் அறிவைக் கெடுத்ததை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/167&oldid=1135845" இலிருந்து மீள்விக்கப்பட்டது