பக்கம்:ஓங்குக உலகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஓங்குக உலகம்


யுற்ற நிலையில்-அந்த அவலத்தைப் போக்கி, கோடானு கோடி மக்களின் கண்ணீரைத் துடைத்த பெரும் நிறுவனமே காங்கிரஸ் (இன்று நாட்டில் உள்ள பிற அனைத்தும் அதன் கிளைகளே எனலாம்.) ஆம்! இன்று அதன் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறுவதறிந்து யாவரும் மகிழக் கடமைப்பட்டவராவார்கள்.

இந்திய நாடு சுதந்திரமடையத் தம் வாழ்வையும் வளத்தையும் செல்வத்தையும் சிறப்பையும் விட்டும் நாட்டுக்குத் தந்தும், தம்மையே தியாகம் செய்த எத்தனை எத்தனையோ பெரியவர்கள் என் கண்முன் நிற்கின்றனர். அண்ணல் காந்தி அடிகளார். ‘தாழ்வொடு வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்ற பாரத தேயத்தை வாழ்விக்க’ வந்த காட்சி மறக்கொணாக் காட்சியன்றோ? இன்றைக்கு ஐம்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் அண்ணலார் தமிழகத்தினைக் கண்டு சுற்றி வந்த நாளில், அண்ணாமலைப் பல்கலைக்கழக எல்லைக்கு அழைத்தோம். நான் அங்கே மாணவர் தலைவனாக இருந்த காலம் அது. அவரை வரவேற்று அவரருகிருந்து அவர் அடிதொட்டு வணங்கி, அவர்தம் நல்வாழ்த்தினைப் பெற்ற அந்த நினைவு என் நெஞ்சில் இன்னும் பசுமையாக உள்ளது. அண்ணலார் அவர்கள் தம்மையே நாட்டுக்கு ஈந்தார்.

தமிழ்நாட்டில் கொடியேந்தி உயிர்விட்ட குமரனும் செக்கிழுத்த சிதம்பரனாரும் கர்மவீரர் காமராசரும் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களும் காங்கிரஸின் அச்சாணியாக நின்று அன்று போராடிய காட்சிகள் மறக்க முடியாதன. நான் என் இளமைக்காலத்தில்-செங்கற்பட்டுப் பள்ளியில் பயின்றஞான்று, அண்ணல் கர்ந்தி அடிகள் தண்டி யாத்திரை மேற்கொண்டு உப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/17&oldid=1127543" இலிருந்து மீள்விக்கப்பட்டது