பக்கம்:ஓங்குக உலகம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முரசுப்பாட்டு

167



மேலும் பாரதி எல்லாரும் எல்லாச் செல்வமும் பெறின் பல சமுதாய ஏற்றத் தாழ்வுகள் அகலும் என்ற உண்மையினை உணர்ந்தவன். எனவே உணவை முதற்படுத்தி அது எல்லாருக்கும் எல்லாம் உண்டு என்ற குறிப்பில்,

‘வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்—இங்கு
வாழும் மனிதர் எல்லார்க்கும்

என்று கூறி, பின்னும்,

‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்—இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்,

என்ற உணர்வையும் வற்புறுத்தி முரசுவழி முழங்கும் நீதியினை முழக்குகிறான். இடையில் இவற்றுடன் அஞ்சாமை, அறிவு, கல்வி ஆகியவையும் சமுதாயம் உயர்ந்திடத் தேவையானவை என்பதையும் அவன் விளக்கத் தவறவில்லை. மேலும் திடங்கொண்டார் மெலிந்தோரை தின்று பிழைப்பதும், தம்பி மெலிவானால் அண்ணன் அவனை அடிமை கொள்வதும் சமுதாய நல்வாழ்வுக்குப் புறம்பானவை என்பதைச் சுட்டுகிறான். இன்று நாட்டில் இத்தகைய கொடுமைகள் நடப்பதையும் வழக்கு மன்றங்களில் இவற்றின் அடிப்படையில் எண்ணற்ற வழக்குகள் உள்ள நிலையினையும் நாம் நன்கு அறிவோம்.

‘சிற்றடிமை’ என்ற சொல்லைப் பாரதி பயன் தெரிந்து கையாளுகிறான். இன்றைய உலகில் காசு இருந்தால் வீசி எதையும் சாதிக்கலாம் என்ற நிலையினைப் பலரும் பேசுகின்றனர்; காண்கின்றனர்; அனுபவிக்கின்றனர். அன்றி, ஆட்சி பலம் இருந்தாலும் எதையும் செய்யலாம் என்ற நிலையும் உலகில் உள்ளதை அறிவோம். இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/170&oldid=1127993" இலிருந்து மீள்விக்கப்பட்டது