பக்கம்:ஓங்குக உலகம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முரசுப்பாட்டு

169


‘ஒன்றென்று கொட்டு முரசே—அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே
நன்றென்று கொட்டு முரசே—இந்த
நானில மாந்தருக் கெல்லாம்’

என்பனவே அந்த முரசின் இறுதி அடிகள். தெய்வம் வாழ்ந்ததாக அமைந்த ஒன்று நீங்க, மற்றுள்ள முப்பத்தொரு கண்ணிகளிலும் பாரதி நீதியாக காட்ட நினைத்தது எந்த வேறுபாடும் அற்ற, எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்றுள்ள, அஞ்சாமை, அறிவு, அன்பு, கல்வி யாவும் பெற்ற, தெய்வ உணர்வு பொருந்திய நல்லதொரு சமுதாயத்தைத்தான். ஆயினும் அவன் மறைந்து அறுபது ஆண்டும் கழித்தும் அவன் கண்ட கனவு நனவாகவில்லை. இதோ அவன் பிறந்த நூறாவது பிறந்த நாள் விழாவும் நாம் இன்று கொண்டாடுகிேறாம், அவனுடைய சொல்லை நாம் செயலில் கொண்டு வாழ்வதே உண்மை விழாவாகும். இதை உணர்ந்து, இந்த நூற்றாண்டு விழாவின் அடிப்படையிலாவது மனித சமுதாயம் வேறுபாடற்று, விடுதலையுற்று, தெய்வநெறி பற்றி அன்பும் அறனும் அறிவும் திறனும் பெற்றுச் சிறக்க வாழுமா என்ற எண்ணச் சிதறல்களோடு விடை பெறுகின்றேன்.

—அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பாரதி மலர்-1982



22. பாவை பாடுவீர்! பயனை நல்குவீர்!

‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கண்ணன் சொன்னதாகப் பகவத்கீதையில் காண்கிறோம். ஆம்! மார்கழி சிறந்த மாதமாகும். உள்மாசும் புறத்தூசும் போக்கும் திங்கள் இதுவாகும். பொங்கலுக்கு முன் மார்கழி முழுவதும் வீடுவாயில்களையும் பிறவிடங்களை

ஓ.—11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/172&oldid=1135846" இலிருந்து மீள்விக்கப்பட்டது