பக்கம்:ஓங்குக உலகம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவைபாடுவீர் பயனை நல்குவீர்!

171


மையிட் டெழுதோம் மலரிட்டு நாமுடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்’

என விளக்கிக் காட்டுகிறார். ஆம்! தூய நீரில் நம்மை மூழ்க வைக்கிறார். மார்கழி நீராட வைக்கிறார். ‘நம் பாவைக்கு’ என்று அவர் குறிப்பது நம் எல்லாரையும் உள்ளடக்கியே தான். சிலவற்றை விலக்கச் சொல்கிறார், செய்யாதனவற்றைச் செய்ய வேண்டாம் என்கிறார். கூடிய வரையில் சமூகத்தைக் கண்டு ஒல்லும் வகையால் உதவி செய்யச் சொல்கின்றார். மொத்தத்தில் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழும் தியாக வாழ்வை மேற்கொள்ளச் செய்கிறார். அந்த நல்ல தூய நோன்பின் முடிவிலே உலகவாழ்விலே-மக்கள் வாழ்விலே-உயிர்கள் வாழ்விலே-இன்பம் பொங்குகிறது! எழில் பொங்குகிறது! யாவும் இனிமையுறுகின்றன. ஆண்டாளே, இந்த இன்பம் மலரும்-செல்வ வாழ்வும் மலரும்-என்பதை நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகிறார்.

‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குட நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்’

என்பது அவர்வாக்கு. ஆம்! பாவை நோன்பு மேற்கொண்டால் நாட்டில் நல்லமழை-மாதம் மும்மாரி பெய்யும். அடியொடு பெய்யாமல் காய்வதோ அன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/174&oldid=1128012" இலிருந்து மீள்விக்கப்பட்டது