பக்கம்:ஓங்குக உலகம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

ஓங்குக உலகம்


அளவுக்கு மீறிப்பெய்து அழிப்பதோ அந்தப்பாவை நோன்பு பாடும்-நோற்கும் நாட்டில் இல்லை. அது மட்டுமன்று; நாட்டில் செந்நெல் அளவற்று விளையும். பால்வளம் பெருகும். எங்கும் பசியும் பிணியும் பகையும் நீங்கும். இன்னும் மக்கள் வாழ்விற்கு-உயிர் வாழ்விற்குத் தேவையான நலங்கள் யாவும் பெருகும்.

இன்று இவையெலாம் மாறுபட்டு நிற்கின்ற நிலையே நாம் பாவை நோன்பினைச் சரிவர மேற்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றதன்றோ! சிந்தாதிரிப்பேட்டை கலியாணம் மகளிர்மேல் நிலைப்பள்ளியில் பயிலும் பெண்கள் அனைவரும் இக்குறை நீக்கும் வகையில் பாவை நோன்பினை மேற்கொள்ள வேண்டும். என்பது என் வேண்டுகோள். மார்கழி முற்றும் நோன்பிருந்து, அடுத்த தையில், நாடகவிழாக் கொண்டாடும் இப்பள்ளியின் நல்ல பெண்கள் வழி நாமும் நாடும் நானிலமும் நலம் பெறலாம் எனும் துணிபுடையேன்.



23. சீதையின் இறுதிப் பிரிவு

‘பிரிவு’ வாழ்வில் விரும்பத்தகாத ஒன்று. கூடிய இருவர் பிரிய எண்ணும் நிலை எண்ணத்தக்கதன்று. வள்ளுவர் இதையே ‘உள்ளப் பிரிதல்’ என்றார். எனவே உயிர்கள் என்றும் இணைந்து வாழ்வதையே விரும்புகின்றன. மக்கள் மட்டுமன்றி விலங்கினங்களும் பறவைகளும் கூடப் பிரிவை எண்ணிக் கண்ணீர் உகுக்கும் காட்சி அனைவரும் காணும் காட்சியேயாம். ஓரறிவுயிராகிய மரமும் புல்லும் கூட இடையில் பிரிக்கப்பெறும் கிளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/175&oldid=1135849" இலிருந்து மீள்விக்கப்பட்டது