பக்கம்:ஓங்குக உலகம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

ஓங்குக உலகம்


தெய்வமில்’ என்ற தமிழ்நாட்டில் புனிதவதியும் கெளரியும் கூடப் பழிக்கத் தக்கவர்கள் தாமே என்ற எண்ணம் தோன்றும். உடனே சைவனாகப் பிறந்த நான் அவ்வாறு எண்ணுதல் பொருந்துமா என்ற உணர்வு, தோன்றும். சைவ சமயத்தில் மட்டுமன்றி உலகப் பிற சமயங்களிலேயும் இத்தகைய நல்ல காதலும் வாழ்வும் குழந்தை பிறத்தலும் கண்கூடு. இந்த இரண்டுங் கெட்டநிலையில் இடர்ப்பாடுற்று முடிவு காண்பது அரிதாகின்றது. இது மனிதக்காதல்; அது தெய்வக் காதல் என்றாலும், இன்றைய அறிவியல் நெறிக்கு மட்டுமன்றித் ‘தெய்வந் தொழாள் கொழுநற்றொழு தெழுவாள்’ என்ற குறள்நெறிக்கும் அத்தெய்வக்காகலும் தவறுடையதே எனத்தோன்றும் அதே வேளையில் உயிரையும் மதியாது தியாகம் செய்த இவர்களைப் போற்றவும் வேண்டியுள்ளது. இந்தச் சிக்கல் ஆய்ந்து முடிபு கண்டு அமையவேண்டிய ஒன்று. இந்தச் சிக்கலே சீதையின் இறுதிப் பிரிவினை எண்ணியதால் தோன்றியதேயாகும்.

கம்பனது இராமாயணத்தில் இந்தச் சிக்கலுக்கு இடம் இல்லை. பொற்பின் செல்வியாம் சீதையைக் கம்பர் தமிழ் முறைப்படி முதலில் இராமன் முன்நிறுத்தி, இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்திய பிறகு மணமுடிக்கிறார். இராமன், காட்டிற்குப் போகும்போது சீதையைப் பிரியநினைக்க, ‘நின்பிரிவினும் சுடுமோ ‘பெருங்காடு’ என்று கூறவைத்து, கம்பர் அவளை அவனுடன் காட்டுக்கு அனுப்புகிறார். இலங்கையில் வாழும்போதும் அச்சீதைக்கு இராமனது எண்ணத்தைத் தவிர வேறு உணர்வைத் தரவில்லை. இராமனை எண்ணி எண்ணி மென்மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/179&oldid=1128021" இலிருந்து மீள்விக்கப்பட்டது