பக்கம்:ஓங்குக உலகம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

ஓங்குக உலகம்


‘சாணினும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட
கோணினும் உளன் மாமேருக்குன்றினும் உளன் இந் நின்ற
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லிலும் உளன் இத்தன்மை
காணுதி விரைவில்’

என்றும் இன்னும் பல வகையிலும் இறைவன் தன்மையினைப் பிரகலாதன் வழியே கம்பர் உலகுக்குக் காட்டுகிறார். பிறகு நடந்த கதை நாமறிவோம். அதுபற்றி இங்கே நான் எழுத வேண்டுவதில்லை.

இந்தப் பாடல்களில் இறைவன் தன்மையினைக் காட்டி, உலகில் வாழும் உயிர்களுக்கு-சிறப்பாக மக்களுக்கு, என்றென்றும் அன்பில் வாழ-அணைந்து வாழ-இன்பில் வாழ-இனிமையுற்று வாழ வழிகாட்டுவதை நாம் நினைக்க வேண்டும். ‘எவ்வுயிரும் பராபரன் சன்னதியதாகும்’ என்று மேலோர் காட்டிய உயரிய நிலையினை எண்ணின் யாருக்கு யார் வேறு பட முடியும்? பொறாமை ஏது? பொய்மை ஏது? கொலை-கொள்ளை-கொடுமை-பிற வன்செயல் யாவும் ஏது? மேலும் ‘அணுவினைச் சதகூறிட்ட’ நிலையினைக் காட்டி அணுவினைப் பிளக்க முடியாது என்று நேற்றுவரை நினைந்த ஒன்றினை அன்றே விளக்கி, அதை எத்தனை எத்தனை கூறாக வேண்டுமாயினும் பிரிக்கலாம் என விளக்கினார். மேலும் அக் கூறுபாடு மக்கள் வாழ்வில் நல்லதுக்குப் பயன்பட வேண்டும் என்பதையும் அல்லலுக்குப் பயன்படின் அழிவே என்றும் சொல்லாமல் சொல்லிவிட்டாரே! ஆம்! இந்த உண்மையினை அன்றைய இரணியனும் உணரவில்லை-இன்றைய இரணியரும் உணரவில்லை. அவன் அழிந்தான்-இவர்களும் அழியத்தான் போகிறார்கள். ஆனால் இவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/185&oldid=1135853" இலிருந்து மீள்விக்கப்பட்டது