பக்கம்:ஓங்குக உலகம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

ஓங்குக உலகம்


றினும் ஒவ்வொரு குறட்பாவினை எடுத்துக்காணின் வள்ளுவர் உள்ளம் தெள்ளிதிற் புலனாகும்.

ஊழே அனைத்தினும் மேம்பட்டது என்பது உலகத்தார் கொள்கை. வள்ளுவர் அக் கொள்கையை மறுக்கவில்லை. அதனினும் பெரு வலிவுள்ளது வேறு இல்லை என அவரும் வற்புறுத்துகின்றார். ஆனால் அது ஆள்வினை உடைமையோடு போட்டியிட்டு வெல்லுமா? இக் கேள்விக்கு வள்ளுவர் அவருடைய இயல்பான தெள்ளிய நெறியிலேயே விடை தருகின்றார்.

வகுத்தான் வகுத்த வகையில் வாழவைக்கும் ஊழ்வினையைப்பற்றி வள்ளுவர் பத்துக் குறள் வெண்பாக்களால் நன்கு விளக்குகின்றார். அவற்றுள் இறுதிக் குறளில் ‘ஊழிற் பெருவலியாவுள?’ என்ற வினாவையும் எழுப்பி இல்லை என விடை தருமாறு முடிக்கின்றார். ஊழினும் வேறாய பல-ஆள்வினை உடைமை, ஊக்கமுடைமை போன்ற செயலாற்றும் திறன்கள்-வந்து சூழ்ந்தாலும் இவ்வூழே அவற்றின் முன்னிற்கும் என்று காட்டுகின்றார்.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”

என்பது அவர் வாக்கு.

இங்கே பிற செயல்களால் முன்னேறவோ வேறு வகையில் செயலாற்றவோ மனிதன் முயன்றாலும், அவற்றிற்கெல்லாம் முன்வந்து நின்றுஊழ் முட்டுக்கட்டை இடும் என்று தான் வள்ளுவர் கூறுகின்றார். இதனால் நாம் மற்றோர் உண்மையை உணர்ந்து கொள்கிறோம். மற்றொன்று சூழும் காலத்து இவ்வூழ் முன்னிற்குமே ஒழிய, அது வெல்லும் என்று வள்ளுவர் கூறவில்லை. ‘முந்துறும்’ என்பது அவர் வாக்கு. முன் வருவதெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/189&oldid=1135862" இலிருந்து மீள்விக்கப்பட்டது