பக்கம்:ஓங்குக உலகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஓங்குக உலகம்



3. ‘வஞ்சமின்றி வாழ்வோம்’


லகம் தோன்றிய நாள்தொட்டு எத்தனையோ ஆன்றோரும் சான்றோரும் தோன்றி வையத்து மக்கள் வாழ்வை மலரச் செய்யும் வழிமுறைகளை ஆய்ந்து அறநெறிகளைத் தந்துள்ளனர். சமயம் வளர்த்த பெரியோர்களும் உலகெங்கணும் வாழும் மெய்ச்சமயங்கள் மக்கள் வாழ்வோடு பிணைந்து சிறக்கும் வகையில் அறவாழ்வை வற்புறுத்தியுள்ளனர். தவறுகளையெல்லாம் செய்துவிட்டு ஆண்டவனுக்குப் பிரார்த்தனையோ காணிக்கையோ செலுத்திவிட்டால் அத் தவறுகள் நீங்கி விடும் என்று நினைப்பவர் நாட்டில் உள்ளனர். ஆனால் அந்த எண்ணம் முற்றிலும் ஏற்புடைத்தாகாது. அறியாது தவறிழைத்து, தவறு என்று அறிந்தபின் வருந்தி இறைவனை வழிபட்டால் அதற்கு ஒரு வேளை கழுவாய் உண்டு என்பதை எல்லாச் சமயங்களும் ஏற்றுக் கொள்ளுகின்றன. உண்மையில் தவறு அறிந்து அழுது அழுது கழுவாய்த் தேடிக்கொண்ட அடியவர் எல்லாச் சமயங்களிலும் உள்ளனர். ஆனால் தவறுக்குப் பிராயச்சித்தமோ அல்லது கழுவாயோ காணிக்கை யாக்கினால் போதும் என எண்ணுவதை எந்தச் சமயமும் ஏற்பதில்லை. அதனாலேதான் எல்லாச் சமயத் தலைவர்களும் சமயம் வாழ்வோடு பிணைந்த ஒன்று என்றும் அவ் வாழ்வினை வாழ்வாங்கு வாழ்ந்தால் இறையருள் கிட்டுமென்றும் அந்த வாழ்வாங்கு வாழும் அறநெறி விட்டு நீங்கின் இறைவன் அருள் செய்யமாட்டான் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர்.

வாழ்வின் அடிப்படை அனைத்துக்குமே உள்ளத் தூய்மை இன்றியமையாதது என்ற உண்மையினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/21&oldid=1127266" இலிருந்து மீள்விக்கப்பட்டது