பக்கம்:ஓங்குக உலகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வஞ்சமின்றி வாழ்வோம்

19


யாவரும் அறிவர். ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என வள்ளலார் வரம் வேண்டுகிறார். இந்த உள்ளொன்று புறமொன்றாக பேசும்-காட்டும் வாழ்க்கையினையே வஞ்ச வாழ்க்கை என்பர். வஞ்சம் என்ற சொல்லுக்குக் கபடம், பொய், கொடுமை, வஞ்சினம், பழிக்குப்பழி, சிறுமை போன்ற பல பொருள்கள் உள்ளன. வஞ்சகம் என்ற சொல்லுக்கும் ஏமாற்றல், தந்திரம், தூர்த்தச் செயல் போன்ற பல பொருள்கள் உள்ளன. அனைத்தும் மனிதனை மிருகமாக்கும் உணர்வினைக் குறிக்கும் சொற்களேயாம். எனவே இவ் வஞ்சம் மனிதனைச் சமுதாய உணர்வு அற்ற ஒரு விலங்காக்குகிறது என்பது தேற்றம்.

ஆண்டவனைப் பாடும் அடியவர்கள் தூய உள்ளம் பெற்றவர்களாக வேண்டும். உடன் வாழும் மனித சமுதாயத்துக்கு ஊறு இழைத்தோ அல்லது வஞ்சம் புரிந்தோ ஆண்டவனை வழிபட முடியாது. ‘பார்க்குமிட மெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற இன்றவன்’ மக்கள் வடிவிலும் உள்ளான் என உணர்ந்து அவர்களுக்கு ஊறு செய்யா வகையில் வாழ்ந்தால்தான் உண்மைச் சமய வாழ்வு ஆகும். சமயச் சின்னங்கள் அணிவதையும் சமயப் பாடல்களை ஓதுவதையும் யாரும் தடுக்கவில்ல்ை. ஆனால் அவற்றுடன்-ஏன்-அவற்றுக்கு மேலாக உள்ளத்தில் கரவடம் அல்லது வஞ்சம் இல்லாதிருக்க வேண்டும் என்பதைச் சமயத்தலைவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

அபபரடிகள் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்-முன்னவர். இறைவனைக் கண்டுகண்டு கசிந்து பாடியவர்; அதே வேளையில் தம் உழவாரப் படைகொண்டு சமூகப் பணி செய்தவர் தவறு செய்த இராவணன் தன் செருக்கடங்கி அழுது அழுது பாடி அருள்பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/22&oldid=1127267" இலிருந்து மீள்விக்கப்பட்டது