பக்கம்:ஓங்குக உலகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஓங்குக உலகம்


நிலையைப் பதிகம் தொறும் காட்டியவர். அவர் இறைவன் அருள்புரியும் நிலையை எண்ணிப்பார்க்கிறார். வஞ்சமின்றி வணங்குவார்க்கு அவன் வந்து அருள்புரியும் தன்மையை உணர்கிறார். எனவே அவர் மக்களை அழைத்து ‘வஞ்சமின்றி வணங்குமின் வைகலும்’ என்று அறவுரை கூறுகின்றார். ‘நாள்தோறும் இறைவனை வழிபடும் நல்லவர்களே! உங்கள் உள்ளத்தில் வஞ்சகத்துக்கு இடம் கொடாதீர்கள்’ என்கிறார். ஆம்! உள்ளத்தில் வஞ்சம் வைத்து அவன் அஞ்செழுத்தினை ஓதினால் அவன் வரமாட்டான்; மாறாக வெகுதூரம் விலகிச் செல்வான் என்கிறார். ‘வஞ்சனயால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானை’ என்பது அவர் வாக்கு. எனவே மெய்ச் சமயநெறி சமுதாயத்தொடு பொருந்திய ஒன்று என்பதும் உள்ளத்தில் வஞ்சமின்றி வாழ்வது என்பதும் தேற்றம். வையம் வாழ-சமுதாயம் தழைக்க நினைக்கும் நாம் அனைவரும் அப்பர் காட்டிய வழிநின்று வஞ்சமற்று வாழ்வோமானால் இம்மையில் நாம் நலமுற்று மறுமையின் பேரின்பம் பெறுவதோடு உலகச் சமுதாயமும் இன்னலின்றி இன்பமுற்று இனிது வாழும் என உணர்ந்து ‘வஞ்சமின்றி வாழ்வோமாக! இதோ அப்பர்தம் வாய்மொழி:-

வஞ்சமின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொலின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சி நின்று உள்குளிர் வார்க்கெலாம்
அஞ்சலென்றிடும் ஆனைக்கா அண்ணலே.

—1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/23&oldid=1127269" இலிருந்து மீள்விக்கப்பட்டது