பக்கம்:ஓங்குக உலகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டுவது அஞ்சாமை

21




4. “வேண்டுவது அஞ்சாமை”

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு”

என்று திருவள்ளுவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே கூறிச் சென்றுள்ளார். நாடாளும் மன்னருக்கு இருக்க வேண்டிய நல்லியல்புகளாகிய சிலவற்றுள்ளே ‘அஞ்சாமையும்’ ஒன்றாக அடங்குகின்றது. இந்தக் குறளை வள்ளுவர். ‘முடியரசர்’களுக்குக் கூறிய ஒன்றாகவே கொள்ளினும், இன்று குடியரசுகள் உலகெங்கணும் ஓங்கும் நிலையிலும், இக் குறள் தேவைப்படுகிற தென்பதை யாவரும் அறிவர். நாட்டை ஆளுகின்ற நல்ல மன்னராயினும் மந்திரியாயினும் அல்லது சாதாரண மக்களாயினும் அவர்கட்கு ‘அஞ்சாமை’ அடிப்படை வாழ்வாக அமைந்தாலன்றி உலகம் என்றும் முன்னேறாது. அஞ்சி அஞ்சி மக்களினம் மாண்டு கழிவதைக் கண்டு வருந்திப் பாடிய புலவர்-அறவோர்-செந்தண்மை பூண்டொழுகும் அந்தணாளர் எண்ணற்றவர். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி அவர் நிலைகண்டு ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என நைந்து பாடுகின்றார்.

‘நெஞ்சு பொறுக்கு தில்லையே-இந்த
நிலை கெட்ட மனிதரை கினைந்து விட்டால்
அஞ்சி அஞ்சிச் சாவார்-அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே’

என்று அவர் கூறி மேலே அவர்களைப் பயமுறுத்தும் பொருள்களின் பொய்த் தோற்றங்களை நன்கு விளக்குகின்றார். ஆம்! இப்படி அஞ்சாததற் கெல்லாம் அஞ்சி அஞ்சி நிற்கின்ற காரணமே மனித சமுதாயத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/24&oldid=1135765" இலிருந்து மீள்விக்கப்பட்டது