பக்கம்:ஓங்குக உலகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஓங்குக உலகம்


கிருஷ்ண ஜயந்தி (கோகுலாஷ்டமி) இராமநவமி, காந்தி ஜயந்தி போன்றவை ஒருசில.

தனிமனிதன் செயல்களைப் பாராட்டும் வகையில் தமிழ்நாட்டிலும் பிறவிடங்களிலும் விழாக்கள் நடைபெற்றன-நடைபெறுகின்றன. வீரர் வழிபாடும், கல்நாட்டு விழா, மன்னர் பிறந்தநாள் மங்கல விழாவும், வெறியாட்டு விழாவும், உண்டாட்டு விழாவும் குருதிப் பலியும் பிறவும் தொல்காப்பியர் காலந்தொட்டு நாட்டில் நடைபெற்றுவருகின்ற விழாக்களாம்.

ஆறறிவுடை மனிதன் ஆரவாரத்தோடு விழாக்களைக் கொண்டாடும் வேளையில், பறவையும் விலங்கும்-ஏன் ஓரறிவுடைய மரமும் செடியும்கூடக் காலந்தொறும் விழாக்களைக் கொண்டாடுகின்றன. இரஷியப் பறவைகள் கூட்டமாகத் தமிழ்நாட்டு வேடந்தாங்கலில் வந்து தங்குவதும் காகம் கலந்துண்ணும் காட்சியும் எறும்பின் ஈட்டமும் விலங்குகளும் ஊர்வனவும் (சமுதாயமாக) இணைந்து செல்லும் காட்சிகளும் நமக்கு விழாவினை நினைப்பூட்டுவன வல்லவோ! பருவம் அறிந்து பூத்துக் காய்த்துக் கனிகளை வழங்கும் மாவும் பலாவும் மற்றவையும் மல்லிகை வசந்தத்தால் பூத்துக் குலுங்குவதும் ஓரறிவுடைய உயிர்கள் கொண்டாடும் மற்றவர் மகிழப் பயன் அளிக்கும் பருவ விழாக்கள்தாமே. இவ்வாறு உயிர்கள் அனைத்துமே ஏதாவது ஒருவகையில் விழா ஆர்ந்து மகிழ்கின்றன என்பது தெளிவு. ஆம்! நாம் மறந்தாலும் பருவவிழாக்களை அவ்வுயிர்கள் நினைவூட்டுகின்றனவே.

விழா எதற்கு என்று எண்ணிப்பார்க்க வேண்டும். பூம்புகாரிலே இந்த விழாவினை அறிவித்த வள்ளுவ முதுமகன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/31&oldid=1127286" இலிருந்து மீள்விக்கப்பட்டது