பக்கம்:ஓங்குக உலகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விழாக்கள்

29


‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வரனும் சிறக்கென வாழ்த்தி'

விழாவினைப் பற்றி அறிவித்தான் என்பர் இளங்கோவடிகள். எனவே நாட்டின் பசியும் பிணியும் நீங்கவும் மக்கள் பகையற்று வாழவும் செல்வ வளன் நாட்டில் சிறக்கவுமே விழாக்கள் நடைபெறுகின்றன என்பது உண்மையாகும். பெற்றது கொண்டு சுற்றத்தாரை மட்டுமன்றி எல்லாரையும் இணைத்து இன்பம் காண்பதுவே விழாவாகும். பூம்புகாரின் இந்திர விழாவிலும் பழைய இலக்கியங்களில் விரும் பிற விழாக்களிலும் இன்றைய சமுதாய நாட்டு விழாக்களிலும் இத்தகைய செயல்களைக் காணலாம். எல்லாரும் இன்புற்று வேறுபாடற்று இணைந்து வாழ வழி வகுப்பதே விழாவாகும்.

‘ஐப்பசி ஓண விழவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்’

என்று ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தர் கூறியுள்ளார். இன்று நாட்டில் இசை விழாக்களும் ஒவ்வொரு துறையினரும் ஆண்டுக்கு ஒரு வாரம் நடத்தும் மரியாதை அல்லது நற்செயல் போற்றும் விழாக்களும் நடைபெறுகின்றன. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இசை விழாக்களைப் பாணர் நடத்திவந்துள்ளனர். இங்கிலாந்து ஜர்மனி, அமரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் 17, 18-ம் நூற்றாண்டுகளில் இத்தகைய இசைவிழாக்கள் நடை பெற்றுள்ளன என அறிகின்றோம்.

தமிழ்நாட்டில் பருவந்தோறும் நடைபெறும் விழாக்கள் பல, மிகப் பழங்காலத்தில் நடைபெறும். இத்தகைய விழாக்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் நன்கு காட்டுகின்றன. புனலாட்டு விழா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/32&oldid=1127288" இலிருந்து மீள்விக்கப்பட்டது