பக்கம்:ஓங்குக உலகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மஞ்சள்

33




6. மஞ்சள்


ஞ்சள் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டுப் பயிரிடப் பெற்ற ஒரு செடி; தமிழர் வாழ்வொடு பொருந்திய பொருள்; தமிழர்தம் உள்ளும் புறமும் நல்லமுறையில் வைத்துக்கொள்ள அமைந்த மருந்து; தமிழர் சடங்குகளில் முக்கிய இடம்பெறும் ஒன்று. ஆயினும் இன்றைய தமிழ்ச் சமுதாயம் அதைப் போற்றிக் காக்காத காரணத்தாலேயே ஊர்தொறும் மருந்தகங்கள். தேவைப்படுகின்றன.

மஞ்சள் தமிழ்நாட்டில் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பெற்று வந்ததை அறிகிறோம். மருத நிலத்தில் சிறப்பாகவும் குறிஞ்சி போன்ற பிற நிலங்களில் பரவலாகவும் பயிரிடப்பெற்ற ஒரு கிழங்கு வகையே இது. இதன் வேறு பெயர்கள் அரிசனம், காஞ்சனி, நீசி, பீதம் என்பன. வடமொழியில் அரித்ரா (Haridra) என்பர். ஆங்கிலத்தில் ‘Turmeric’ என்பர். தாவர அறிஞர் இதற்கு இட்டபெயர் [Botanical Name]—Curceema longa என்பதாகும். இது பூமிக்குள் கிழங்காக அமைந்து விளைவதாகும்.

இந்த மஞ்சளைக் கப்பு மஞ்சள், கறி மஞ்சள் என இரண்டாகப் பிரிப்பர். கப்பு மஞ்சள் கிழங்கின் நடுவாயமைந்த பெரிய பாகத்தை அதன் சிறு கிளைகளாகிய விரல் கிழங்குகளிலிருந்து பிரித்து, உலர்த்தி நல்லெண்ணெயில் பக்குவப்படுத்தி வைப்பர். இதையே மகளிர் உடம்பில் பூசுவதற்குப் பயன்படுத்துவர். கறி மஞ்சள், நடுக் கிழங்கிலிருந்து கிளைத்த விரல் போன்றவற்றை வேறுபடுத்தி எடுத்து, சாணப்பாலில் வேகவைத்து, பதப்படுத்தி, உணவு வகைக்குப் பயன்படுத்துவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/36&oldid=1135784" இலிருந்து மீள்விக்கப்பட்டது