பக்கம்:ஓங்குக உலகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மஞ்சள்

37


பொன்னிறத்தைப் பெறுவதோடு, உடலில் தோன்றும் புலால் நாற்றமும் நீங்கப்பெறுவர். நல்ல பசியினை உண்டாக்கும். இதனால் வாந்தி, கோழை முதலிய குற்றங்களும் தலைவலி, நீரேற்றம், வெள்ளை, சளி ஐவகைவலி, வீக்கம், வண்டுகடி, பெரும்புண் ஆகிய நோய் முதலியனவும் இல்லாமல் நீங்கும். எனவே உடலை முற்றும் காக்கும் ஒரு பெருமருந்தாக இது அமைகின்றது.

இன்று கிராமங்களில் மஞ்சளைப் பொடியாக்கிப் புண்கள் மீது தூவுவதையும், மஞ்சளைச் சாதத்துடன் சேர்த்து அரைத்துக் கட்டிகள் மேல் வைத்துக்கட்டுவதையும் அவற்றால் அவை நீங்கப்பெறுவதையும் காண முடியும். கிராமங்களுக்கு மருத்துவ வசதிகளை விஸ்தரிக்க நினைக்கும் தமிழக அரசு இந்த வகையில் பண்டைத் தமிழ் மரபில் கருத்திருத்தினால் மிக்க பயன் விளையும் என்பது உறுதி.

அம்மை உண்டாகும்போது வேப்பிலையுடன் மஞ்சளை அரைத்து அக் கொப்புளங்களின்மீது தடவி, அதன் வேகம் தணிப்பர், மஞ்சளுடன் ஆடாதொடை இலையினைச் சேர்த்து, கோமயம் இட்டு அரைத்து, சொறி, சிரங்கு, நமைப்பு நீங்கப் பூசுவர், மஞ்சளுடன் சுண்ணாம்பு, பொட்டிலுட்பு இட்டு அரைத்து, சுட வைத்து சுளுக்கு, அடிபட்ட புண் இவற்றிற்குப் பயன்படுத்துவர். பச்சைமஞ்சளை அரைத்துச் சாறு எடுத்து, அட்டைக்கடி, நஞ்சு, புதிய காயப்புண், புண்வீக்கம் இவை நீங்கப் பூசி நலம்பெறுவர்; மஞ்சள் பொடியினை அளவாக (10 அல்லது 12 குன்றுமணி அளவு) நீரொடு உண்டு, வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி, மாறல் சுரம் முதலியன நீங்கப்பெற்று வன்மை பெறுவர்; அந் நீரை அருந்தின் காமாலை போம் என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/40&oldid=1127306" இலிருந்து மீள்விக்கப்பட்டது