பக்கம்:ஓங்குக உலகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

ஓங்குக உலகம்



கிராமங்களில் பலர் தூய வெள்ளாடையினை மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி அதை அணிவதைக் காண்கின்றோம். அதனால் வாதநீர்ச்சுருக்கு, இருமல், நச்சுச்சுரம், மாறாத தினவு, தனிச்சுரம், மலக்கட்டு முதலியன நீங்கும் என்பர். கண்நோய் பெற்றவர் இந்த உலர்ந்த மஞ்சள் துணியினை அடிக்கடி கண்ணில் ஒற்றி அந்நோய் நீங்கப் பெறுவதைத் தமிழ்நாட்டு நகரங்களில் இன்றும் காண்கின்றோம்.

இவ்வாறு பலவகையில் மக்கள் உடலுக்குப் பயன்படுவதோடு மருந்தாக, பொலிவுதரும் பொருளாக, காப்புப் பொருளாக, கற்புப் பொருளாக அமைவதோடு, அவர்தம் வீடுகளைத் தூய்மையாக வைத்திருக்கவும் மஞ்சள் உதவுகிறது. தமிழ்நாட்டில் விழாக்களுக்குப் பஞ்சமில்லை; இதோ சரஸ்வதிபூசை, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் என்று மாதந்தொறும் விழாக்கள் வருகின்றன. அந்நாளிலெல்லாம் வீடுகளைத் துப்புரவு செய்து எங்கும் மஞ்சள் நீர் தெளிக்கிறோம் (நகரங்களிலும் உண்டு). வாயிற் படிகளுக்கெல்லாம் மஞ்சள்பூசி, அதன்மேற் குங்குமத்தையும் இடுகிறோம். பொங்கல் நாளில் மஞ்சள் செடியினை வைத்து, மஞ்சள் இலையில் சோறு இட்டு, நாம் சூரியனை வழிபடுகிறோம். வெள்ளிக்கிழமைதொறும் மஞ்சள்பூசி குங்குமப் பொட்டிட்டு வழிபடும் பழக்கம் உண்டு. இதென்ன, இவ்வளவு நல்ல மருந்தை வாயிற் படிக்கும் பிற மரங்களுக்கும் இட்டுப் பாழாக்குகிறார்களே என்று எண்ணத் தோன்றும், அந்த எண்ணம் தவறாகும்.

தமிழன் கலைநலம் கண்டவன் கல்லிலும் மரத்திலும் பிறவற்றிலும் நுண்ணிய வேலைப்பாடுகளைச் செய்து அதை என்றென்றும் வாழவைத்துக்கொண்டிருக்கிறான். நாட்டிலும் காட்டிலும் மலையிலும் கோயிலிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/41&oldid=1127309" இலிருந்து மீள்விக்கப்பட்டது