பக்கம்:ஓங்குக உலகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. நாட்டின் நலன் கண்டவர்


8. திரு. வி.க..சில நினைவுகள்

நான் அப்போது வாலாஜாபாத் இந்து மத பாடசாலையில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். என்னை நான் முற்றும் அறியாத காலம் 1925-26 என எண்ணுகிறேன். அப்போது காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. (மாநாட்டின் விளைவுகள் தமிழ் நாட்டில் பல வேறுபாடுகளை உண்டாக்கின எனப் பிறகு அறிந்தேன்). அந்த மாநாட்டில் (1926) கலந்துகொண்ட நால்வரை வாலாஜாபாத் பள்ளிக்கு திரு.வா.தி. மாசிலாமணி எனும் பள்ளியின் நிறுவனர் அழைத்துவந்தார். இளங் குழந்தைகள் பலர் பேசினர். நானும் பேசினேன். சாதி ஒற்றுமையா அல்லது சாதி வேற்றுமையா என்பது பொருள். நான் ஆசிரியர் தந்த குறிப்பின்படி சாதி ஒற்றுமையைப்பற்றி வற்புறுத்திப் பேசினேன். என் பேச்சு முடிந்ததும் தலைமைவகித்த டாக்டர் வரதராசலு நாயுடு அவர்கள் அவருக்கு இட்ட மாலையினை எடுத்து, என் கழுத்தில் இட்டு, ‘நீ வருங்காலத்தில் சிறக்க உயர்வாய்’ என வாழ்த்தினார். பக்கத்தில் இருந்தவர் என்னை முதுகில் தட்டிக் கொடுத்து ‘உனக்கு நல்ல எதிர்காலம்’ இருக்கிறது என ஆசி கூறினார். அவர்தாம் திரு.வி க. எனப் பிறகு ஆசிரியர்கள் சொல்ல அறிந்தேன். வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/47&oldid=1127325" இலிருந்து மீள்விக்கப்பட்டது