பக்கம்:ஓங்குக உலகம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

ஓங்குக உலகம்


திருவாளர்கள் சச்சிதானந்தம் பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், ரா.பி. சேதுப்பிள்ளை, கோவை. இராமச்சந்திரன் செட்டியார், சுந்தர ஓதுவர் மூர்த்திகள் புரிசை சு. முருகேச முதலியார் ஆகியோரையும் வரச்சொல்லி, ஒரு பெரிய மகாநாட்டினையே என் சிற்றூரில் நடத்திவைத்தார். ஓரிரு முறை நான் காஞ்சியில் இருந்தபோது என் குடிலுக்கு வந்து தங்கியும் இருக்கிறார்.

பிறகு நான் 1944-ல் சென்னைப் பச்சையப்பனில் பணி ஏற்றபோது, அவரை வணங்கி அவர் நல்வாழ்த்தினைப் பெற்றே பதவி ஏற்றேன். அதுமுதல் அடிக்கடி அவர்கள் வீட்டிற்குச் சென்று வேப்பமரத்தடியில் இருந்து பலப்பல பொருள்களைப் பற்றியெல்லாம் பேசியதுண்டு. அப்போது நான் அரசியலில் இருந்த காரணத்தால் அரசியல் பற்றியும் பேசுவோம். தொழிலாளர் நலன் பற்றியும் பேசுவதுண்டு. நான் நடத்திய ‘தமிழ்க் கலை’யில் தொழிலாளர் பற்றிய கட்டுரைகளும் பாடல்களும் இடம் பெறும். பின் சைவசித்தாந்த சமாசத்தின் துணைச் செயலாளனாகவும் அதன் இதழாகிய சித்தாந்தத்தின் துணை ஆசிரியனாகவும் இருந்த காரணத்தால் ஒவ்வொரு மாதத்திலும் ஏழெட்டு நாட்கள் அச்சகப் பணியின் பொருட்டு (அது சாது அச்சுக் கூடத்தில் அச்சிடப் பெற்றது) அங்கே தங்குவேன். அப்படியே சென்னையில் நான் ‘தமிழ்க் கலை’யினை வெளியிட்ட சில ஆண்டுகளிலும் (சாது அச்சுக் கூடத்தில் அச்சிடப்பெற்றது) அங்கே பல நாள் தங்குவேன். அப்போதெல்லாம் திரு.வி.க. கூறிய அறிவுரைகளும் ஆக்க உரைகளும் அளப்பில.

இவ்வாறு நெருங்கிப் பழகிய அந்த நல்லவர் தொடர்பு, கடைசிவரையில் இருந்தது. நானும் டாக்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/49&oldid=1127557" இலிருந்து மீள்விக்கப்பட்டது