பக்கம்:ஓங்குக உலகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு.வி.க. சில நினைவுகள்

47


‘மு.வ., அவர்களும் அடிக்கடி அங்கே சென்று வருவோம். எதிர் வீட்டிற்கு மாற்றப் பெற்ற போதும் நாங்கள் செல்லத் தவறவில்லை. இறுதியில் சில நாட்கள் பல மணி நேரம் அவர் அருகிலேயே அமர்ந்திருந்தோம். இறுதி ஊர்வலத்திலும் (சுமார் 1/2 மைல் நீளம்)-எல்லாக் கட்சியினரும்-சமயத்தினரும்-எல்லா இனத்தினரும் -யாவரும் கலந்து கொண்ட அந்த ஊர்வலத்தில்-இறுதி யாத்திரையில் கலந்து அவர் உயிரன்றி உடலும் அமைதியுறக் கண்டு வந்தோம். இவ்வளவு நெருங்கிப் பழகிய போதிலும் நான் அவருக்கு வேண்டியவன் என்றோ, நெருங்கியவன் என்றோ, யாரிடமும் நான் காட்டிக் கொள்வதில்லை; சொல்லுவதில்லை. பேசாமல் ஒதுங்கிவிடுவேன்.

இப்புடி 1925 முதல் 1953 வரை அவரிடம் பழகிய பான்மையால் நான் பெற்ற பலன்கள் பல. எனக்கு ஆங்கிலத்தில் நல்ல அழகான சர்ன்றிதழ் ஒன்றினை அவர் கையொப்பமிட்டுத் தந்துள்ளார். அப்படியே ஒரு நூலும் அளித்துள்ளார். அவர் எழுதிய நூல்கள் சில அச்சேறுவதன் முன்பே எங்களுக்கு அவர் படித்துக் காட்டுவார்; அல்லது எங்களைப் படிக்க விடுவார். அவர் பேச்சுகள் சில சமயம் அச்சாகும் போது, அவற்றைப் படிக்கவும் செய்வோம். இவ்வாறு என்னைப் போன்று பல லட்சக்கணக்கான மக்கள் உள்ளங்களில் வாழும் அவருக்கு இன்று தமிழக அரசு நூற்றாண்டு விழா கொண்டாடுவது சாலப் பொருத்தமாகும்.

திரு வி.க அவர்களை நினைக்கும்போது, அவர் தம் தமையனார் உலகநாத முதலியாரும் அண்ணியாருமே என்முன் நிற்கின்றனர், ஆம்! அவர்கள் திரு.வி.க.வினைக் ‘கண்ணை இமை இரண்டும் காப்பது போல்’ கட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/50&oldid=1127559" இலிருந்து மீள்விக்கப்பட்டது