பக்கம்:ஓங்குக உலகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு.வி க. சில நினைவுகள்

49


மென்று சொல்லுவதோடு அவர்களிடம் போக்குவரத்துக்குக் கூடக் காசு வாங்க மாட்டார்கள். பேச்சுக்கு இவ்வளவு என்று கேட்பதும் ஒரே ஊரில் மூன்று நான்கு நிகழ்ச்சிகள் இருப்பினும் மூன்று நான்கு இடத்தும் போக்குவரவுச் செலவு பெறுவதும் போன்ற ‘நாகரிகம்’ அவர் அறியாதது. எனவே எதற்கும் காசு பெறமாட்டார். ஆனால் சில சமயங்களில் பஸ் செலவுக்கு எனக் காசு எடுத்துக் கொள்ளாமலேயே ‘பஸ் ஸ்டாண்டு’ வரையில் வந்து நினைத்துக் கொண்டு பிறகு வீடு சென்று காசுடன் புறப்படுவார். ‘பஸ் ஸ்டாண்டு’ அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தது. சில சமயம் ‘பஸ்’ ஏறிய பிறகு பையைத் துழாவிக் காசு கொண்டுவராததை உணர்வார். எனினும் அவரைப் பலரும் அறிந்துள்ளமையின் ‘பஸ்’சில் யாராவது அவர் போகுமிடத்துக்கு ‘டிக்கெட்’ எடுத்துத் தருவார்கள். இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்கு அண்ணனாரும் அண்ணியாரும் ஒரு ஏற்பாடு செய்து வந்தனர். அவர் புறப்படுமுன் அவர் போட்டுக் கொண்டு போக இருக்கும் ‘சொக்கா’யினை எடுத்து மாட்டி, அதில் இரண்டு ரூபாய்க்குச் சில்லறையைப் போட்டு வைப்பார்கள். அந்தக் காலத்தில் சென்னையில் எங்கே சென்று வந்தாலும் ஒரு ரூபாய்க்குமேல் செலவு ஆகாது. இதை அண்ணா பல வேலைகளுக்கு இடையில் செய்ய மறந்தாலும் அண்ணியார் மறப்பதில்லை. இதைத்தான் முன்னே ‘ஏற்பாடு’ என்று சொன்னேன். இது ஒரு எடுத்துக்காட்டு. இப்படி எல்லா வகையிலும் திரு.வி.க.வைக் கண்ணென அண்ணலாரும் அண்ணியும் போற்றிய காரணத்தால்தான் நாம் இன்று நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் அளவுக்கு அவர் புகழ் பெற்றார். அவருடைய பேரப்பிள்ளைகள் என்று இப்போது நாம் அழைக்கும் அனைவரும் உலகநாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/52&oldid=1127564" இலிருந்து மீள்விக்கப்பட்டது