பக்கம்:ஓங்குக உலகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

ஓங்குக உலகம்


முதலியார் பேரப்பிள்ளைகளேயாவர் (இருபெண்கள் வழியே). திரு.வி.க.வின் பிள்ளைகள் யாரும் வாழவில்லை.

இனி திரு.வி.க.வை நினைக்கும்போது பெரியார் அவர்தம் உருவும் என்முன் நிழலிடுகின்றது. பெரியாரைத் தந்தை என்றால் திரு.வி.க.வைத் தாய் என்போம். அந்தத் தாய்க்கும் தந்தைக்கும் எத்தனையோ வகையில் பிணக்குகளும் மாறுபாடுகளும் இருந்தபோதிலும் இருவருக்கும் குறிக்கோள் ஒன்றாக இருந்தமையின் அவர்கள் கடைசிவரை இணைந்தே இருந்தார்கள். அவர்கள் குறிக்கோள்தான் என்ன? ஆம். ‘அவர்தம் மக்கள் அனைவரும் வாழவேண்டும்’ என்பதே. இருவருக்கும் சொந்தக் குழந்தைகள் கிடையா. ஆயினும் தமிழ் நாட்டு மக்கள் அனைவரையும் தங்கள் குழந்தைகளாகவே பாவித்து, அவர்கள் வாழ்க்கை உயரவே இருவரும் அயராது பாடுபட்டு உழைத்தனர். பாடுபட்ட வழிகள் வேறாக இருந்தாலும் குறிக்கோள் ஒன்றே!

இன்று நாட்டில் உள்ள திராவிட இயக்கத்துக்கு வித்திட்டவர் தந்தை பெரியார் என்றால் அதற்குப் பெயரிட்டவர் தாய் ‘திரு.வி.க.’ தாய் இட்ட பெயரை இன்று ஊர் இட்டு அழைக்கின்றது. அவ்வளவே! எப்படி? பெரியார் முதலில் தமிழர் இயக்கம் தொடங்கி, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றமுழக்கத்தை நாடு எங்கும் எழுப்பினார். அதைப் பலபேர் ஏற்றாலும் சிலர் அவருக்கு விரோதமாக ‘நீ தமிழன் அல்லன், நீ ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கி எங்களை ஏமாற்றாதே’ எனப் பேசக் கிளம்பினர். எனவே தந்தை பெரியார் சென்று அன்னை திரு வி.க.வுடன் ஆலோசித்தார். திரு.வி.க. அவர்களே ‘திராடநாடு திராவிடருக்கே’ என்ற முழக்கம் செய்யச் சொன்னார். ஆம்! அந்த வேப்பமரத்தடியிலேதான் இந்த முடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/53&oldid=1127566" இலிருந்து மீள்விக்கப்பட்டது