பக்கம்:ஓங்குக உலகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ஓங்குக உலகம்


யாண்டும் போதித்தார். ஆயினும் மதமாற்றத்தை இவர் விரும்பவில்லை. சில கிறித்தவர் சைவத்தைப் பழித்தால் விடமாட்டார். தம் கொள்கையினை விளக்கி வெற்றி காண்பார். எல்லாச் சமயங்களிலும் உள்ள நலக்கேடுகளை எடுத்துக் காட்டுவார். சமரசம் ஒன்றே உலகை வாழவைக்கும் என்பதை உணர்ந்து உணர்த்தினார். நவசக்தியிலும் எழுதினார். சமயவெறி கூடாது என வற்புறுத்தினார். இச்சமரசம் பற்றி இவர் எழுதிய பல பாடல்கள் ‘பொதுமை வேட்டல்’ என்ற இவர் பாடல் தொகுப்பில் உள்ளன.

பெண்களிடம் உயர்ந்த மதிப்பு வைத்திருந்தார். ‘பெண்ணின் பெருமை’ இவர் நூல்களுள் சிறந்தது. பெண்களைத் தாயாக-தெய்வமாக மதித்துப் பேசினார்; எழுதினார். இவர் இல்வாழ்வு சில காலமே இருந்தது என்றாலும் இல்லறத்தை உயர்வாகப் போற்றினார். அவ் வாழ்வில் பெண்கள் கொள்ளவேண்டிய கொள்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் உணர்த்தினார். தம் தமையனாரின் இரு பெண்களையும் கண் எனக் காத்தார். தமையனாரின் ஒரே மகன்-பாலசுப்பிரமணியன் இளமையில் மறைந்தார். இவருக்குப் பிள்ளைப்பேறு இல்லை. சில பள்ளிகளின் பொறுப்பாளராக இருந்து நடத்தினார். தெருவில், பிறவிடங்களில் குடும்பப் பெண்கள் அவர்தம் கணவர்களால் துன்புறுத்தப் பெறும்போது, தாமே வலியச் சென்று அவர்களை நல்வழிப்படுத்தினார்.

தமிழ் மொழி வளர்ச்சியில் அவர் பங்கு பெரிது. இதழ்கள் நடத்தியமை, பேசியமை தவிர்த்து அவர் எழுதிய நூல்கள் பலப்பல-கவிதைகள் பலப்பல-சீர்திருத்தக் கட்டுரைகள் பலப்பல. சாதி, சமய வேறுபாடுகளைக் கண்டித்து எழுதியவை-தொழிலாளர் நலம் பற்றியவை-அரசியல் போராட்டங்கள் - பற்றியவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/63&oldid=1127378" இலிருந்து மீள்விக்கப்பட்டது