பக்கம்:ஓங்குக உலகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா

67




11. பேரறிஞர் அண்ணா
சிந்தனைகள் சில


பேரறிஞர் அண்ணா அவர்களை நினைக்கும்போது சிந்தனை நீள்கிறது; ஐம்பது ஆண்டுகள் எல்லையைக் கடந்தும் அது செல்லுகிறது. நானும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவனாதலின், இளமை முதற்கொண்டே அண்ணா அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தேன். இளமையில் படிக்கும் காலத்தில் காங்கிரசு கட்சியின் சார்பு கொண்டவனாயினும், 1937ல் இந்தி தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது அதிலிருந்து நீங்கி, தமிழ்த் தொண்டு செய்து வருகின்றவன். அந்த நாள் தொட்டும் அதற்கு முன்பும் அண்ணா அவர்களை நன்கு அறிவேன். 1930ல் செங்கற்பட்டில் சுயமரியாதை இயக்க மாநாட்டில் தொண்டனாகப் பணியாற்றியவன் ஆதலின், அந்த நாள் தொட்டே ‘ஐயா’ பெரியார் அவர்களையும் அண்ணா அவர்களையும் அறிவேன். 1936ல் காஞ்சியில் பணி ஏற்ற பின்பு அவர்களுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு வந்தது.

1938ல் நான் காஞ்சியில் ஆண்டர்சன்ட் பள்ளியில் பணியாற்றிய அந்த நாளில் ‘காங்கிரசு’ கட்சியை எதிர்த்து மாவட்ட ஆட்சிக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டேன் நான். அந்தக் காலத்தில் மாவட்ட எல்லா அதிகாரங்களும் அதனிடம் குவிந்திருந்தன. எனவே போட்டி கடுமையாக இருந்தது. மேலும் அந்தக் காலத்தில் காங்கிரசுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தமையின், அதை எதிர்த்துப் போட்டியிடப் பெருந் தலைவர்களும் செல்வர்களும் அஞ்சினர். சாதாரண ஓர் உயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/70&oldid=1135807" இலிருந்து மீள்விக்கப்பட்டது