பக்கம்:ஓங்குக உலகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா

69


பணியேற்றபோது, பச்சையப்பரில் அதுவரையில் தமிழாசிரியர் கல்லூரியின் முதல்வராக இருந்ததில்லை என்பதைக் கல்லூரி அளித்த பாராட்டுவிழாவில் விளக்கிச் சொன்னார்கள். அனைவரும் என்னை எண்ணித்தான் அண்ணா அவர்கள் அதைச் சொன்னார்கள் என்றனர். அப்போது இருந்த முதல்வரும் துணை முதல்வரும் என்னினும் இளையவர்கள் ஆனதால் எனக்கு அப்பதவி தர இயலா நிலையில், எண்ணி எண்ணி, ஆட்சிக் குழுவினர் என் ஓய்வுக் காலத்தை 62 வயதுவரை தள்ளி வைத்து, மூன்றாண்டுகள் மற்றொரு பதவி அளித்து துணை முதல்வராக நியமித்தனர். நான் ஓய்வு பெற்றதும் அப்பதவியும் இல்லையாயிற்று. அண்ணா அவர்கள் கருத்தின் வழியே நான் பெற்ற பதவியை எண்ணி மகிழ்ந்தேன்.

காஞ்சியை அடுத்த வாலாஜாபாத்தில் நான் செயலாளனாக இருந்து ஓர் உயர்நிலைப்பள்ளியினைத் தொடங்கினேன். வட்டத் தலைநகரங்கள் தவிர்த்து வேறு இடங்களில் உயர்நிலைப்பள்ளி இல்லாத காலம் அது. 6 ஏக்கர் நிலமும் 25,000 ரூபாயும் தந்தால் அரசாங்க உயர்நிலைப்பள்ளி அமைக்க ஏற்பாடு செய்ய வழி இருந்தது. அப்போது நான் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் சொந்த ஊரில் உயர்நிலைப்பள்ளி தொடங்க விரும்பி முயன்றேன். பல அன்பர்கள் உதவினர். எனினும் 25,000 ரூபாய் சேர அன்று வழி இல்லை. உளம் உடைந்து நின்ற அந்த வேளையில், அண்ணா அவர்கள் தாமே வலிய வந்து உதவுவதாகக் கூறி ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற நாடகத்தையும் மற்றொன்றையும் இரண்டுநாள் வாலாஜாபாத்தில் நடத்தி, அதன் முழு வருவாயினையும் பள்ளிக் குழுவுக்கு அளித்ததை என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/72&oldid=1127524" இலிருந்து மீள்விக்கப்பட்டது