பக்கம்:ஓங்குக உலகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

ஓங்குக உலகம்


நான் மறந்தறியேன்-ஆம்! அது மேநிலைப் பள்ளியாக இன்று நடைபெற்று வருகின்றது. அப்பள்ளியின் தொடக்கவிழா, கட்டடக் கால்கோள் விழா, கட்டடத் திறப்புவிழா அனைத்திலும் அண்ணா அவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள். (பள்ளியில் உள்ள கல்வெட்டு இன்றும் சான்று பகரும்)

இடையில் அரசியல் மோதல் பற்றிய நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. சட்டமன்றத் தேர்தலின்போது-1957 என எண்ணுகிறேன்-காங்கிரசினை எதிர்த்து இருவர் போட்டியிட்டனர். இவர்கள் போட்டியினால் இருவரும் வெற்றிபெற முடியாத நிலை இருந்தது. நான் அப்போது அரசியலில் இல்லையாயினும், என் வட்டத்தைச் சேர்ந்தகாரணத்தால் சிலர் சில செயல்களுக்காக என்னை அழைப்பர். இந்த இருவர் போட்டியினைப் பற்றி அண்ணாவும் நானும் கலந்து பேசி, ஒருநாள் இரவு ஒன்பது மணி அளவில் அண்ணாவின் இல்லத்துக்கு, அந்த இருவரையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வரச் சொன்னோம். அவ்வாறு அவர்கள் வந்தபிறகு, பேசியதில் இருவரும் தேர்தல் களத்திலிருந்து விலக மறுத்து எத்தனையோ காரணங்கள் காட்டினார்கள். என்றாலும் ஏழு மணி நேரம் பேச்சுக்கிடையில்-விடியல் மூன்று மணிக்கு-ஒருவர் விண்ணப்பத்தைத் திருப்பிப் பெற ஏற்பாடு செய்ய முடிந்தது. இந்த முயற்சியில் அண்ணா அவர்கள் கையாண்ட நல்ல உத்திகள் போற்றற்குரியனவாம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றபோது, நான் தமிழக அரசினால் ஐதராபாத் அனுப்பப்பெற்று, உஸ்மானியப்பல்கலைக் கழகத்தில் பணி செய்து வந்தேன். அப்போது முதலமைச்சராக இருந்த மாண்புமிகு திரு. பக்தவத்சலம் அவர்கள் என்னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/73&oldid=1127527" இலிருந்து மீள்விக்கப்பட்டது